Take a fresh look at your lifestyle.

இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறு மாதம் சிறை

கடன் பிரச்சினை

227
  • இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சைதாப்பேட்டை நீதிமன்றம். எண்ணி ஏழு நாட்கள் திரைப்படத்திற்காக பிவிபி நிறுவனத்திடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

பிவிபி நிறுவனத்திடம் லிங்குசாமி வழங்கிய காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்ததால் காசோலை மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் இயக்குனர் லிங்குசாமி, அவரது தம்பி ஆகிய இருவருக்கும் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய லிங்குசாமி வழக்கை மேல்முறையீடு செய்யப் போவதாக கூறியுள்ளார்.