







பேரறிஞர் அண்ணாவும்
பராசக்தியும்…(1) – ரெபெல்ரவி
சந்திரமோகன் அ சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்கிற நாடகத்தை எழுதிய அறிஞர் அண்ணா, அதில் சிவாஜியாக நடிக்க முதலில் தேர்ந்தெடுத்தது வேறோர் நடிகரை.
அண்ணாவின் நண்பர் டி வி நாராயணசுவாமி, அண்ணாவை அந்த நடிகர் இல்லம் அழைத்துச் சென்றார். ஸ்கிரிப்டைப் படித்த அந்த நடிகர்,இது என் கொள்கைக்கு எதிராக, இந்து மத எதிர்ப்புக் கருத்துக் கொண்டுள்ளது..நான் நடிக்க மாட்டேன் எனத் தன் அண்ணனிடம் கூற, நடிகரான அண்ணன்..டேய்..பெரிய எடம்டா பகைச்சுக்காதே என அறிவுறுத்தியும், நடிகர் விடாப்பிடியாக மறுத்து விட்டார்..இதை அண்ணாவிடம் சொல்ல…புன்னகையோடு அண்ணா ஏற்றுக்கொண்டார்.. நீங்கள் பிராஹ்மணரா என்று கேட்க..இல்லை நாயர் என்றாராம் நடிகர்…
இதில் வேறு யாரை நடிக்க வைப்பது என அண்ணா யோசித்த போது…டி வி என் நம்ம பிரஸ்ல ஒரு பய வேலை செய்றான்…சின்ன வயசுல டிராமாலாம் நடிச்சிருக்கானாம்..அவன டிரை பண்லாமா எனக்கேட்க..பிரஸ்ல வேலை பாக்குற பையன் எபிடி என அண்ணா தயங்க..டிவி என் அந்தப் பையனை அண்ணா முன் நிறுத்த..அவனைப் பார்த்த அண்ணா, தம்பி இந்தா ஸ்கிரிப்டு..படிச்சுப்பாரு. நா வேலூர் வரிக்கும் போய்ட்டு வரேன்..என்று கூறிக்கிளம்பி விட்டார்..
வேலூரிலிருந்து அண்ணா வந்ததும்..தம்பி எதாவது நடிச்சிக் காட்டு எனக்கேட்க…அந்தப்பையன்..நாடகத்தின் அனைத்துக் கேரக்டர்களின் வசனங்களையும் பேசி நடிக்க…அசந்து போன அண்ணா…
அந்தத் தம்பியையே நாடக நாயகனாக்கினார்…
அண்ணாவின் ஸ்கிரிப்டை ரிஜக்ட் செய்த வெள்ளை நாயர் நடிகர்: எம்ஜிஆர்…
பிரஸ்ஸில் வேலைசெய்து…சந்திரமோகன் ஹீரோவாக நடித்து..பெரியாரால்..சிவாஜி என அழைக்கபட்ட அந்த நடிகன்..கணேசன்..