







*ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் நிறைவு விழா செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது*
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 மத்திய கல்வி அமைச்சகத்தின் முயற்சியின் மூலம் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் ஹேகத்தானில் கடந்த 25 ஆகஸ்ட் முதல் 29 வரை கலந்து கொண்டனர் இதை தொகுத்து வழங்க தனியார் பல்கலைக்கழகத்தோடு க்ரிஸெண்ட் பவுண்டேஷன் அண்ட் இன்குபேஷன் கவுன்சில் இணைந்து செயல்பட்டு மாணவர்களுக்கு ஒரு சுற்றுச்சூழல் அமைத்து தந்தது இதில் 160 மாணவர்கள் கொண்ட குழு 15 அறிவுரையாளர்களும் கலந்து கொண்டனர்.
தொழிற்சாலைகள் நிலவி வரும் இன்றைய தேவைகளை புரிந்து கொண்டு இன்றைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிப்புகளாகவும் புதிய கண்டுபிடிப்புகளாகவும் மாணவர்கள் செய்து காட்டினார்
இதனைத் தொடர்ந்து ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2022 நிறைவு விழா நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திரு சுரேஷ் சம்பத் அவர்கள் இன்றைய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் பற்றியும் அதன் சவால்களை பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் மேலும் இதனை தொடர்ந்து கௌரவ விருந்தினராக திரு இளங்கோவன் அவர்கள் மாணவர்களுக்கு இடைவிடாத முயற்சியை பெரிதும் பாராட்டியதோடு தனித்து நிற்கும் திறமையை மாணவர்கள் வளர்த்துக் கொள்கின்றனர் எனவும் பாராட்டினார்
தொழிற்சாலைகளின் தேவைக்கேற்ப தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்து ரூபாய் ஒரு லட்சம் காசோலை வழங்க வெற்றி குழு தீர்மானித்து அறிவிக்கப்பட்டது
அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து நியூரோ மேட்ரிக் குழு வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி மதுரை ஆந்திர மாநிலத்திலிருந்து ஹைட்ரோ கிராவிட்டி குழு கீதம் பல்கலை மற்றும் ஃபோனிக்ஸ் குழு பிரகதி தொழில்நுட்பம் கல்லூரியிலிருந்தும் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து நிட்ரா 2k22 குழு kk வாக் நிறுவனத்தின் இடம் இருந்து மற்றும் கேர் லீப்டர்ஸ் குழு பஜாஜ் தொழில்நுட்பம் நிறுவனத்தில் இருந்தும் டேன்யூசஸ் குழு பஜாஜ் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட குழுக்கள் வெற்றி வாகையை சூடியது
இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற குழுக்கள் யாவருக்கும் வெற்றி சான்றிதழ்களும் ஒரு லட்சம் ரூபாய் காசோலை பெற்றுச் சென்றனர் போட்டியில் பங்கு பெற்ற அனைத்து மாணவ மாணவி குழுக்களுக்கும் சான்றிதழ்களும் நினைவு பரிசும் வழங்கப்பட்டது