







நடிகர்கள்:
சாயா சிங் as ராணி
‘பேபி’ ராஃஅத் பாத்திமா as லில்லி
தம்பி ராமையா as சம்பவ மூர்த்தி துஷ்யந்த் as மைக்கேல் .
ஜெயபிரகாஷ் as மந்திரி அற்புதம்
தயாரிப்பு நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர்: கிளாப்பின் சினிமாஸ் & செந்தில் கண்டியார்
இயக்குனர்: விஷ்ணு ராமகிருஷ்ணன்
ஒளிப்பதிவு: சிவ தர்ஷன்
இசை: ஜெர்வின் ஜோஷுவா
பின்னணி இசை சேரன்
படத்தொகுப்பு: பேஸ்வந்த் வெங்கடேஷ்
கலை: விஜய வீரன்
பாடலாசிரியர் ஞானகரவேல்
எழுத்தாளர்: AK
மக்கள் தொடர்பு: P.ஸ்ரீ வெங்கடேஷ்
விபச்சாரியாக இருக்கும் பெண்ணுக்கு ( சாய் சிங் ) ஒரு பெண் குழந்தை பிறக்கிறது அந்த பெண் குழந்தைக்கு வித்தியாசமான கேன்சர் நோய். அந்த நோயை தீர்க்க இரத்த சம்பந்தமான யாராவது ஒருவர் உதவி செய்தால்தான் முடியும். ஆனால் அப்படி யாரும் சாயா சிங்குக்கு இல்லை. அதனால் குழந்தையின் தந்தையை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். அவரிடம் யாரெல்லாம் உறவு கொண்டார்களோ அவர்களை எல்லாம் தேடி கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார், குழந்தையை காப்பாற்ற. அப்படி இரண்டு பேரை அவர் கண்டுபிடிக்கிறார் அவர்களும் மனிதாபிமான அடிப்படையில் இதற்கு ஒத்துழைக்கிறார்கள். இதனால் அந்த குழந்தை காப்பாற்றப்பட்டது. அதற்கு தேவைப்பட்ட 40 லட்சம் ரூபாய் பணம் எப்படி கிடைத்தது என்பது தான் திரைக்கதை.
வித்தியாசமான கதையை தான் யோசித்து இருக்கிறார்கள். விபச்சாரியின் மனதுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதை சொல்ல வந்திருக்கிறார்கள். ஒரு குழந்தைக்கு உடல்நிலை சரி இல்லாவிட்டால் உயிர் போகக் கூடிய சூழ்நிலையில் மனிதாபிமானம் எப்படி பிறக்கிறது என்பதை காட்டி இருக்கிறார்கள். ஆனால் அதற்காக கிளைமாக்ஸ்சில் ஒரு அமைச்சரின் மகன் அந்த குழந்தையை காப்பாற்ற தந்தையாரிடம் பொய் சொல்லி 3 கோடி ரூபாய் பெற்று இந்த குழந்தையை காப்பாற்றியதாக காட்டுகிறார்கள். ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று இந்தப் படத்தில் ஒரு கருத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர். படம் கொஞ்சம் கத்துக்குட்டித்தனமாக இருக்கிறது. இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு வேலை பார்த்திருந்தால் இன்னும் நன்றாக பெயர் கிடைத்திருக்கும்.
சாயா சிங் விபச்சாரி பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால் பலான காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை. அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அவர் ஒத்துக் கொண்டிருப்பார் போல் தெரிகிறது குழந்தையை காப்பாற்றுவதற்காக அவர் பலவித செயல்களில் ஈடுபடுகிறார். ஆனால் அதற்கான அழுத்தத்தை அவருடைய நடிப்பில் கட்ட தவறி விட்டார்.
தம்பி ராமையா சப் இன்ஸ்பெக்டராக படத்தில் வருகிறார் ரெய்டுகாக செல்லும் பொழுது ஒரு லாட்ஜுக்குள் போகிறார் அங்கு விபச்சாரி சாயா சிங்கை,ஒரு அறையில் தனிமையில் பார்க்கிறார். சபலப்பட்டு அவரோடு உடலுறவு கொண்டு விடுகிறார். இதனால் அந்த குழந்தைக்கு இவர்தான் தந்தை என்று தெரியவந்து மாட்டிக் கொள்கிறார். இந்த கேரக்டர் இவருக்கு தேவையா என்று கேட்கத் தோன்றுகிறது. ஓவர் ஆக்டிங்.
துஷ்யந்த் அமைச்சரின் மகனாக துடிப்பான இளைஞனாக போதைக்கு அடிமையானவராக பணக்காரமிடுகோடு நடித்திருக்கிறார். செய்யாத தவறுக்கு சிக்கி சின்னாபின்னம் ஆகிறார். குடித்துவிட்டு காரிலேயே தூங்கி விடுவது போல் வருகின்ற காட்சி எல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது….
கடைசியில் அந்த அப்பாவிடம் சென்று விஷயத்தை கூறி மூன்று கோடி பணம் கேட்டதும் அவர் எடுத்து உடனே கொடுத்து விடுவதாகவும் அந்த குழந்தைக்கு ஆபரேஷன் செய்து நலமாகி விடுவதாகவும் படத்தை முடிக்கிறார்கள். படம் என்னவோ சீக்கிரம் முடிந்த ஒரு திருப்தி இருக்கிறது.இருந்தாலும் எந்த அமைச்சர் 3 கோடி ரூபாய் மகன் என்ன மனைவியே கேட்டாலும் உடனே,எடுத்துக் கொடுத்து விடுவார்? இப்படி பல காட்சிகள் எதார்த்தமாக இல்லை.இருப்பினும் டைரக்டர் உடைய சிந்தனை பாராட்டும்படி இருக்கிறது….