Take a fresh look at your lifestyle.

முதல்வர் மு க ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து திரும்பிய பாரதிராஜாவை சந்தித்து உடல்நலம் பற்றி விசாரித்தார்

246

திருச்சிற்றம்பலம் என்கிற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் நடித்த பாரதிராஜாவுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள். இந்த நிலையில் 15 நாட்களுக்கு முன்பு பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை பாரதிராஜா மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அமைந்த கரையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் இருக்கும் எம்ஜிஎம் என்கிற மிகப்பெரிய மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு ஐசியூவில் சிகிச்சை பெற்று வந்த பாரதிராஜா உடல் நலம் தேறி டிசார்ஜ் செய்யப்பட்டார். உடனடியாக அங்கிருந்து அவர் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார். இன்று பாரதிராஜாவை அவருடைய வீட்டிற்கு சென்று முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் பற்றி விசாரித்தார். அவருடன் கவிஞர் வைரமுத்து, பாரதிராஜா மகன் நடிகர் மனோஜ் குமார் ஆகியோரும் இருந்தனர்.