Take a fresh look at your lifestyle.

*அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய தமிழக காங்கிரஸ் பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம் …!*

224

*அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய தமிழக காங்கிரஸ் பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம் …!*

*காங்கிரஸ் கட்சியின் தலைவர், தேசிய உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தேசியத் தலைவருக்கு வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றம்*

காங்கிரஸ் கட்சியில் மாநில அளவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டங்கள் நடத்துவது வழக்கம். கடைசியாக 2017-ல் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அனைத்து மாநிலங்களிலும் பொதுக் குழு கூட்டங்கள் நடத்தி மாநில தலைவரை நியமிக்கும் அதிகாரம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை அகில இந்திய தலைவருக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப வேண்டும்.

இந்த நடைமுறையை நாளைக்குள் நடத்தி முடிக்கும்படி அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலத்திலும் பொதுக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில், கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது.
இதில், தேர்தல் அதிகாரி கவுரவ் கோகாய் எம்.பி., மேலிட பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், சிரிவெல்லபிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர்.

இந்த பொதுக்குழுவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை தேர்வு செய்ய வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதே போல், மாநில தலைவர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை அகில இந்திய தலைமைக்கு வழங்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்தை,
காங்கிரஸ் செயல்தலைவர் ஜெயக்குமார் வழிமொழிந்தார், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,
கிருஷ்ணசாமி
ஆகியோர் முன்மொழிந்தனர்.

ஒட்டுமொத்தமாக பொதுக்குழுவில் 690 பேர் உள்ள நிலையில் 654 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.