Take a fresh look at your lifestyle.

இனி அரசியலில் ஈடுபடப்போவது இல்லை – நடிகர் நெப்போலியன்!

465

இனி அரசியலில் ஈடுபடப்போவது இல்லை – நடிகர் நெப்போலியன்!

இனி அரசியலில் ஈடுபடப்போவது இல்லை – நடிகர் நெப்போலியன்!
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஜீவன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் 23 , வது தொடக்க விழா நேற்று இரவு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அதன் நிறுவனரும் நடிகருமான நெப்போலியன் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

நான் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருந்த போதும், சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும் மத்திய அமைச்சராக இருந்தபோதும் தொடர்ந்து இளைஞர்கள் வேலை வாய்ப்பு கேட்டுக்கொண்டிருந்தனர். எனவே இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் ஜீவன் டெக்னாலஜி கம்பெனி நிறுவப்பட்டது.
என்றார்.

மேலும் குழந்தையின் உடல் நலக்குறைவால் சினிமா தொழிலில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. அரசியலில் இருந்து விலகி ஏழு வருடங்களாகிறது. இனி அரசியலுக்கு வரமாட்டேன். ஜீவன் டெக்னாலஜியின் அடுத்த கிளையை திருச்சி துவங்க உள்ளோம். அடிப்படையில் விவசாய குடும்பத்தை சார்ந்து நான் உள்ளதால் விவசாயம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஜீவன் டெக்னாலஜி சுரேஷ், அசோக் குமார், IPS.கண்ணன் ஜெகதீஸ் , IAS.சண்முகசுந்தரம்,IAS சசிகுமார் மற்றும் SVM சரவணன், வசந்தி பாபு, அஜய், சீதாராமன் உள்ளிட்டோர் ஏராளமான கலந்து கொண்டார்கள்.