Take a fresh look at your lifestyle.

சூரி ஓட்டல் சோதனை;ஜி எஸ் டி வரி ஏய்ப்பு

சூரியின் ஓட்டலுக்கு சீல் வைக்கப்படுமா?

106

மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான ஓட்டலில் வணிக வரித்துறையினர் சோதனை நடத்தியதையடுத்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
நடிகர் சூரியின் ஓட்டல்கள் மதுரையில் தெப்பக் குளம், அரசு மருத்துவ மனை, ரிசர்வ்லைன், ஒத்தக்கடை, மீனாட்சி புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடிகர் சூரிக்கு சொந்தமாக அம்மன் என்ற பெயரில் ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த சில வருடங்களில் அடுத்தடுத்து தொடங்கப்பட்ட இந்த ஓட்டல்களில் உணவு பொருட்கள் மற்ற ஓட்டல்களை விட குறைந்த விலையில் தரமாக வழங்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவியதையடுத்து நடிகர் சூரியின் ஓட்டலில் எந்த நேரமும் கூட்டம் அலை மோதும்.”

இந்த நிலையில் நடிகர் சூரிக்கு சொந்தமான ஓட்டல்களில் கட்டணம் ஜி.எஸ்.டி. வசூலிக்காமல் உணவு பொருட்கள் பொது – மக்களுக்கு வழங்கப்படுவதாக வணிக வரித்துறைக்கு பல்வேறு தரப்பிலி ருந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
இதையடுத்து நேற்று மாலை வணிகவரித்துறை அதிகாரி – செந்தில் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள அம்மன் ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினர். இந்த ஓட்டல் தவிர அவரது மற்ற ஓட்டல்களின் நிர்வாகம் தொடர்பாக கணக்குகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதால் அங்கு நீண்ட நேரம் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஓட்டலுக்கு தினசரி வாங்கப்படும் மளிகை மற்றும் பல சரக்கு பொருள்கள் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட்டன. அதற்கு முறைப்படி ஜி.எஸ்.டி. உள்ளதா என்றும் அதிகாரி கள் ஆய்வு செய்தனர். மேலும் ஓட்டல்களில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவு பண்டங்கள் தொடர்பான பில்கள் சரியாக பராமரிக்கப்பட்டுள்ளதா? குறித்தும் வணிகவரித்துறையினர் ஆய்வு செய்தனர்.”
அப்போது ஜி.எஸ்.டி. தொடர்பான முறை கேடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் இருந்து மதுரையில் மளிகை மற்றும் பலசரக்கு பொருட்கள் வாங்கியதிலும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட உணவு விநியோகத்திலும் ஜிஎஸ்டி போடாததும் தெரிய வந்தது. இது தொடர்பான ஆவணங்களை நகல் எடுத்துக் கொண்ட வணிக வரித்துறையினர். இது குறித்து ஓட்டல் நிர்வாகத்தினரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்தனர்.
அந்த நோட்டீசில் பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மதுரை வணிகவரித்துறை அலுவலகத்தில் 15 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும், தவறும் பட்சத்தில் சட்டரீதியாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவறு நடந்து இருந்தால் ஓட்டல்களுக்கு சீல் நடவடிக்கையில் இருந்தும் தப்ப முடியாது.
நடிகர் சூரியின் ஓட்டலில் வணிகவரித்துறை திடீர் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.‌