Take a fresh look at your lifestyle.

மணிரத்தினம் படத்தில் வேலை செய்யும் போது கை கால்களை இழந்த லைட் மேனுக்கு யாரும் உதவவில்லை

ஊனமுற்ற லைட் மேன் உதவி கோரி கமிஷனர் அலுவலகத்தில் மனு

271

*சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனோகரன் திரைப்பட லைட் மேனாக பணிபுரிந்து வந்த நிலையில் கை மற்றும் கால்களை இழந்து தவிக்கும் திரைப்படம் குழுவினர்கள் வாழ தனது சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு மன வேதனை உடன் கண்ணீர் மழக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார் மேலும் திரைப்பட நடிகர் லாரன்ஸ் அவர்கள் 10,000 வழங்கிய நிலையில் தான் வீட்டிற்க்கு வாடகை கட்டியதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்*

சென்னை வேப்பேரி பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பாளரும், இயக்குனருமான மணிரத்னம் அவர்களின் “குரு” படத்தின் வேலை செய்யும் போது வந்த விஷக்காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை வழங்காமல் கை, கால்கள், வேலை, வருமானம் பாதித்து வாழ்வாதாரம் இழந்த தனக்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் மிகுந்த சிரமப்பட்டு வாழ்ந்து வரும் எனது குடும்பத்தினர்க்கு மறுவாழ்வுக்காக கருணை அடிப்படையில் உதவுமாறும்

மேலும் *தமிழ் திரைப்படத்துறையில் (சினி TV) லைட்மேன் யூனியனில் 1989 முதல் உறுப்பினராகி “கமல் சாரின் ஹோராம், மகாநதி, மகளிர் மட்டும், இந்தியன், காதலன், ஜென்டில்மேன் மேலும் ரஜினி, அஜித், விஜய், விஜய்காந்த் நடித்த படங்கள் மற்றும் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் பல்வேறு படங்களில் பம்பாய், இருவர், நேருக்கு நேர், திருடா திருடா ஆயுத எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டாள்*

2006-ல் தயாரிப்பாளரின் சொந்த யூனிட் Focus-ல் *இயக்குனர் மனிரத்னம் தயாரித்து இயக்கிய குரு (2006-ல் அபிசேக் பச்சன்*,
*ஜஸ்வர்யாராய் நடித்த) படத்தில்* *சேர்ந்து வேலை செய்யும் போது வைரஸ் காய்ச்சல்* ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் (ரூபாய் இரண்டு இலட்சம்) செலவு செய்தால் குணமடைய வழியிருந்தும் உதவி கிடைக்காத காரணத்தால் மருத்துவமனையில் அரசு அனுமதிக்கப்பட்டு 2008-ல் 90% மாற்றுத்தினாளியாக மாறினேன்.

எனது லைட்மேன் சங்கமும் உதவாத காரணத்தால் சங்கத்தின் மீது தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து (2011-ல் தீரப்பு வந்தது சங்கம் இரண்டு இலட்சம் வழங்க வேண்டும் என்று) அதையும் சங்க நிர்வாகம் முழுமையாக செயல்படுத்தவில்லை என்றும் மேலும் அறிமுக கூட ஆகாதவர் கருணை உள்ளம் கொண்ட லாரன்ஸ் அவர்கள் பத்தாயிரம் ரூபாய் கொடுத்ததாகவும் அவர் கொடுத்த ரூபாய் வைத்து கொண்டு தான் மூன்று மாதம் வாடகை வீடு கொண்டு வாடகை தொகையை கட்டியதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் யாரேனும் உதவிகள் அறக்கட்டளை மூலம் செய்பவர்கள் இருந்தால் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்