Take a fresh look at your lifestyle.

போல் வால்ட் விளையாட்டில் சாதனை படைத்த ரோசி மீனா உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்

110

போல் வால்ட் விளையாட்டில், தேசிய சாதனை படைத்திட்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா, திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

சமீபத்தில் குஜராத்தில் நடந்து முடிந்த தேசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்ட தஞ்சைப்பெண் ரோசி மீனா பால்ராஜ், போல் வால்ட் விளையாட்டு போட்டியில் 8 வருடங்களாக இருந்த சாதனையை முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார்.

சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வமுள்ள ரோசி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி அவர்களின் ஸ்பான்ஷரில் இதுவரையிலும் பல சாதனைகள் படைத்துள்ளார்.

தேசிய அளவில் புதிய சாதனை படைத்ததை அடுத்து, இன்று திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பில் M.செண்பகமூர்த்தி உடனிருந்தனர்.