Take a fresh look at your lifestyle.

கமல் 234 வந்து படத்தை உதயநிதி தயாரிக்க மணிரத்னம் இயக்குகிறார்

145

நடிகர் கமல் தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடிச்சு வரும் நிலையில் அடுத்ததாக மணி ரத்னத்துடன் இணையவுள்ளார்.

இதுகுறிச்ச அஃபீஷியல் அறிவிப்பு தற்போது வெளிவந்துருக்குது.

கமல்ஹாசனின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு அவரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டுச்சு.

அந்த திரைப்படத்தை கமல்ஹாசனுடைய ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தியன்-2 திரைப்படத்தை முடித்தவுடன் மணி ரத்னம் இயக்கவுள்ள படத்தில் கமல்ஹாசன் இணைய உள்ளார் என்ற அறிவிப்பால் கோலிவுட்டே குதூகலாமாகி வருது.. பின்னே 35 வருஷங்கள் கழிச்சு இவிய்ங்க இணைஞ்சு கொடுக்கப் போகும் படம் குறிச்சு இப்ப சிலாகிச்சு பேச ஆரம்பிச்சிட்டாய்ங்க