Take a fresh look at your lifestyle.

மதங்களைத் தாண்டிய மனிதநேயத்தைப் போற்றும் “அயோத்தி”

83

இந்தியாவின் மிகப்பெரிய ஓடிடி தளமாக கருதப்படும் ZEE5 தனது அடுத்த தமிழ் வெளியீடாக, பரவலான பாராட்டுக்கள் பெற்ற ‘அயோத்தி’ படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை தெரிவித்துள்ளது. Trident Arts தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ,நடிகர் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா மற்றும் புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக உலக திரைப்பட தகவல் தளமான ஐஎம்டிபி இணையதளத்தில் 8.5 மதிப்பீட்டினை பெற்றுள்ள அயோத்தி திரைப்படம் திரையரங்குகளில் அமோகமான வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 7 ஏப்ரல் 2023 அன்று இப்படத்தின் அதிகாரப்பூர்வ உலக டிஜிட்டல் பிரீமியரை ZEE5 அறிவித்துள்ளது.

அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்திற்குச் சுற்றுலா செல்ல முடிவெடுக்கும் நான்கு பேர் கொண்ட குடும்பத்தைச் சுற்றிதான் இப்படத்தின் கதை நகர்கிறது. மதுரையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் கார் பயணத்தின்போது, ​​தேசபக்தர் பல்ராம் ஓட்டுநரிடம் தவறாக நடந்து கொள்கிறார், இருவருக்குமான வாக்குவாதத்தால் ஏற்படும் விபத்தில், பல்ராமின் மனைவியின் மரணத்திற்கு காரணமாகி விடுகிறது. மீதிக் கதையானது, அதீத மதவெறி பிடித்த தந்தையின் கைகளில் படாதாபாடு படும் இரண்டு குழந்தைகளின் துன்பங்களையும், டிரைவரின் நண்பர்களான இருவர் (சசிகுமார் மற்றும் புகழின் கதாபாத்திரங்கள்) தங்கள் தாயின் சடலத்தை எடுத்துச் செல்ல குழந்தைகளுக்கு உதவுவதையும் சித்தரிக்கிறது. இதையெல்லாம் தாண்டி அவர்களின் சொந்த ஊருக்கு எப்படிச் செல்கிறார்கள் என்பதே படத்தின் கதைக்கரு. மதங்களைத் தாண்டிய மனிதநேயம் போற்றும் காவியமாக இப்படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டுக்களைக் பெற்றது.அயோத்தி படத்தின் இசையமைப்பாளர் NT ரகுநந்தனின் பின்னணி இசை உணர்ச்சியமான காட்சிகளை வேறொரு நிலைக்கு உயர்த்துகிறது மற்றும் படத்திற்கு பக்க பலமாவும் அமைத்திருந்தது.மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு அயோத்தி மற்றும் ராமேஸ்வரத்தை காட்சிப்படுத்தி இப்படத்திற்கு உயிரோட்டம் கொடுத்துள்ளார்.

ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மனிஷா கல்ரா படம் குறித்து கூறுகையில்,
ZEE5 தளத்தில் எங்கள் பார்வையாளர்களுக்கு தொடர்ந்து தரமான பொழுதுபோக்கை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம், இதுமட்டுமில்லாமல் எங்களின் தமிழ் வெளியீடுகள் இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக வெவ்வேறு ஜானர்கள், புதுப்புது திறமைகள், உயர்தரத்திலான தயாரிப்பு மற்றும் தெளிவான வடிவங்கள் கொண்ட கதைகளை நாங்கள் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துகிறோம். அந்த வகையில் எங்களின் அடுத்த வெளியீடாக அயோத்தி படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியரை அறிவிப்பத்தில் மிக்க மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார். முக்கியமாக மதங்களை தாண்டிய மனிதநேயத்தை போற்றும் இந்தக்கதை ஒற்றுமையையும் அன்பையும் பேசுகிறது.எங்கள் பார்வையாளர்களை மகிழ்விக்கும் அதே வேளையில் அவர்களை ஒன்றாக இணைக்கும் மேலும் இதுபோன்ற கதைகளை வழங்க நாங்கள் ஆவலாக உள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

நடிகர் எம்.சசிகுமார் கூறுகையில்,
“மதங்களை தாண்டி மனித நேயம் பேசும் ஒரு அழகான காவியமான “அயோத்தி” படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். இப்படம் மனித உணர்வுகளின் சரியான கலவையைக் கொண்டுள்ளதோடு ‘வாழ்க்கை’ என்ற இந்தப் பயணத்தில் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். திரையரங்கில் பாராட்டுக்களைப் பெற்ற இப்படம், இன்னும் அதிக அளவிலான பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 190+ நாடுகளில் பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் ZEE5 தளத்தில் இப்படம் வெளியிடுவது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. குறிப்பாக அயோத்தி படம் மூலம் ரசிகர்கள் ஒரு அழகான அனுபவத்தைப் பெறுவார்கள்.