







ஸ்ரீ நல்ல வீரபசாமி நிறுவனம் சார்பில், V. பாலகிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் பிக்பாஸ் புகழ் அமீர், பாவனி ஜோடி, ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் ரொமான்ஸ் காமெடி திரைப்படத்தின் பூஜை திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் எளிமையாக இனிதே துவங்கியது. குறிப்பாக இப்படத்தின் கதையை பிக்பாஸ் புகழ் அமீர் தானே எழுதி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடந்த இப்படத்தின் பூஜையில், படக்குழுவினருடன் தயாரிப்பாளர் G.தனஞ்செயன், திண்டுக்கல் லியோனி, விஜய் ஆதிராஜ், நிரூப், பிரியங்கா, ஷாரிக், ரச்சிதா, கிஷோர்,சத்யா, ரியோ ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
பிக்பாஸ் மூலம் தமிழ்க மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர்கள் அமீர், பாவனி ஜோடி தற்போது வெள்ளித்திரையில் ஒன்றாக இணையவுள்ளார்கள் என்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியே ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸில் இருவரது ஜோடிப்பொருத்தமும் எல்லோராலும் பாரட்டப்பட்ட நிலையில், சமீபத்தில் இந்த ஜோடி அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் ஒன்றாக நடித்திருந்தார்கள். நடன இயக்குநர் அமீரும், நடிகை பாவனியும் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடியாக வலம் வந்த நிலையில், இப்போது ஹீரோ ஹீரோயினாக அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார்கள்.
முழுக்க முழுக்க ரொமான்ஸ் காமெடியாக உருவாகும் இப்படத்தில் தற்கால இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் வகையில் ரொமான்ஸ் காமெடி படமாக உருவாகவுள்ளது. அமீர், பாவனி ஹீரோ ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் மன்சூர் அலிகான், காயத்திரி ஜெயராம், சுரேஷ் சக்ரவர்த்தி, சாதனா, VTV கணேஷ், அலீனா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு புரமோ வீடியோவுடன் கூடிய விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.