Take a fresh look at your lifestyle.

தமிழ் புத்தாண்டில் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்ற சாமானியன் குழு

70


தமிழ் சினிமாவில் 80, 90களில் மக்கள் மத்தியில் எளிய மக்களின் முகமாக அறியப்பட்டவர்தான் மக்கள் நாயகன் நடிகர் ராமராஜன். தொடர்ந்து பல படங்களில் நடித்து விமர்சன ரீதியாவும், வசூல் ரீதியாவும் வெற்றி பெற்று வெள்ளி விழா படங்களை கொடுத்த பெருமை இவருக்கு மட்டுமே உண்டு. குறிப்பாக இவரது வெற்றியின் பின்னணியில் பெரும் தூணாக இருந்து அவரது படங்களுக்கு காலத்தால் அழியாத அருமையான பாடல்களை கொடுத்தவர் இசைஞானி இளையராஜா. தற்போது இவர்கள் இருவரும் 23 வருடங்களுக்கு பிறகு ‘சாமானியன்’ என்கிற படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது. மேலும் இப்படி ஒரு அபூர்வ கூட்டணியை மீண்டும் இணைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ள இயக்குநர் R.ராகேஷ் இந்த படத்திற்கு முன்னதாக தம்பிக்கோட்டை, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை எட்செட்ரா என்டர்டெய்ன்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகிகளாக ஸ்மிருதி வெங்கட், அபர்னிதா மற்றும் நக்சா சரண் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதுமட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கே எஸ். ரவிக்குமார், சரவணன் சுப்பையா, ராஜாராணி பாண்டியன், மைம் கோபி, கஜராஜ், முல்லை கோதண்டம், விஜய் டிவி தீபா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு அருள்செல்வன், படத்தொகுப்பு ராம்கோபி, சண்டைக்காட்சிகள் மிரட்டல் செல்வா, மற்றும் எஸ் கே கலை இயக்குனராக பொறுப்பேற்றுள்ளனார்.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. அந்தவகையில் இந்தப்படத்திற்கான பின்னணி இசையில் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் இசைஞானி இளையராஜா.