







கோலிவுட் சினிமாவில் நகைசுவை நடிகராக ஆரம்பித்து கடின உழைப்பால் தற்போது பல படங்களில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் ரசிகர்கள் பல படங்களை எதிர்பார்த்து காத்திருந்தாலும் தற்போது இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் சந்தானத்திற்கு கதாநாயகியாக ‘வேலையில்லா பட்டதாரி’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களில் நடித்திருந்த சுரபி கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன், முனீஸ்காந்த், தங்கதுரை, தீபா, சைதை சேது, மானசி உள்ளட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இதுமட்டுமில்லாமல் டிடி ரிட்டன்ஸ் போஸ்டர் ஆர்.கே. என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஒஎப்ஆர்ஒ இசையமைக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ‘டிடி ரிட்டன்ஸ்’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது சம்மந்தமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது