







தமிழ் சினிமாவில் படம் முழுக்க நடித்தும் கவனம் பெறாமல் போனவர்களும் உண்டு இன்னொரு பக்கம் ஒரு சிலர் ஒரு சில காட்சிகளில் மற்றும் வந்து மக்கள் மத்தியில் மிக பெரிய அளவில் இடம்பிடிப்பார்கள். அந்த வகையில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஷாலு ஷம்மு. இந்தப்படத்தை தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார் குறிப்பாக ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’, ‘மிஸ்டர் லோக்கல்’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ஷாலு ஷம்மு.திரைப்படங்களில் மட்டுமில்லாமல் பல டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களை உற்சாகபடுத்துகிறார்.
இந்நிலையில் இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஐ போன் ஒன்று வாங்கியுள்ளார். இதனையடுத்து கடந்த 9-ஆம் தேதி இரவு சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் ஷாலு ஷம்மு நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து சூளைமேட்டில் உள்ள அவரது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். அடுத்த நாள் எழுந்து பார்க்கும் போது செல்போன் காணாமல் போனதை தெரிந்து போனதை அடுத்து ஷாலு ஷம்மு நட்சத்திர விடுதிக்கு சென்று தேடியும் கிடைக்காததால் இது தொடர்பாக பட்டினபாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்துள்ளார். மேலும், தனது ஐபோன் காணாமல் போன விவகாரத்தில் தன்னுடன் இருந்த நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்