







யான் விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. குறிப்பாக இப்படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், சில பல காரணங்களால் தள்ளிப்போனது.இதனால் ரசிகர்கள் மாபெரும் ஏமாற்றத்தை கண்டனர். மேலும், இப்படம் கண்டிப்பாக வரும் இது பற்றின அறிவிப்பு வருமேன எதிர்பாத்திருந்தனர். இதையடுத்து சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் ‘விரைவில் ஜான் உங்களை சந்திப்பார்’ என்றும் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் பின்னணி இசையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தீவிரம் காட்டி வருவதாகவும் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த படம்தான் பொன்னியின் செல்வன். இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 படமும் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. .இந்நிலையில், நடிகர் விக்ரமின் பிறந்த நாளை முன்னியிட்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் ‘துருவ நட்சத்திரம்’ படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை இயக்குனர் கவுதம் மேனன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் இப்படத்திற்காக காத்துகொண்டிருக்கின்ற என்பதில் சந்தேகமில்லை எனலாம்.