Take a fresh look at your lifestyle.

‘லியோ’ அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு திரிஷா சொன்ன நச் பதில்

63


தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே பிரபலன இயக்குனராக திகழ்பவர்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். தற்போது விக்ரம் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்றதையடுத்து சமீபத்தில் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.குறிப்பாக மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த கூட்டணிதான் லோகேஷ் மற்றும் தளபதி விஜய்.

இந்நிலையில் தொடர்ந்து இப்படத்தின் அடுத்த அப்டேட்காக எதிர்ப்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இப்படத்தில் நடிக்கும் நடிகை திரிஷா ஒரு சூப்பரான தகவல் கொடுத்திருக்கிறார். அந்த விதத்தில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை திரிஷாவிடம் ரசிகர்கள் ‘லியோ’ படத்தின் அப்டேட் கேட்டு ஆர்ப்பரித்தனர். இதற்கு திரிஷா, “நீங்கள் எங்கே போனாலும் இந்த கேள்வி கேட்பதனால் சொல்கிறேன். ‘லியோ’ படப்பிடிப்பில் இருந்து தான் வருகிறேன் எனவும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், உங்க தளபதி விஜய் எல்லோரும் நல்லாயிருக்காங்க, மற்றவை ‘லியோ’ நிகழ்ச்சியில் பேசலாம்” என கூறினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் கைதட்டல்களால் அரங்கத்தை அதிர செய்தது குறிப்பிடத்தக்கது.