







தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையாக திகழ்பவர்தான் நடிகை த்ரிஷா.தமிழில் மௌனம் பேசியதே படம் மூலம் அறிமுகமானாலும் அதை தொடர்ந்து வெளிவந்த சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா போன்ற பல படங்களில் முன்னணி கதாநாயகருக்களுடன் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகை திரிஷா. இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 படத்தில் நடித்து முடித்துள்ளார். ஏற்கனவே பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்.
தற்போது பண்ணியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் புரொமோஷன் பணிகளில் திரிஷா மற்றும் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் திரிஷா நடித்து வருகிறார்.குறிப்பாக இந்த ஜோடி நீண்ட இடைவேளைக்கு பிறகு இணைவதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் திரிஷா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது. முக்கியமாக நீல நிற உடையில் திரிஷா இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் பகிர்ந்து எப்போதும் போல அவரது அழகை வர்ணித்து பதிவிட்டு வருகின்றனர்.