Take a fresh look at your lifestyle.

ரசிகர்களுக்கு சிம்புவின் பிரியாணி விருந்து! வைரல் வீடியோ

105

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் பத்து தல. இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் நஷ்டம் என்றே சொல்லப்பட்டு வந்தது. இப்படி இருக்கையில் சிம்பு கெரியரில் மிகப்பெரிய லாபம் ஈட்டி இருப்பதாக ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது சிம்பு ரசிகர்களுடையே பெரிய சந்தோசத்தை தந்தது.இதனால் சிம்பு ரசிகர்கள் அவருடைய அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் தற்போது ரசிகர்களை சிம்பு இன்று சந்தித்து இருக்கிறார்.இந்த நிகழ்ச்சியில் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட நிலையில் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் சிம்பு. சிம்பு அவர் கையால் பிரியாணி பரிமாறும் புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.