







தமிழ் சினிமாவில் தனது வசனங்கள் மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டவர் கிரேஸி மோகன். நாடக கலைஞர், வசனம் மற்றும் திரைக்கதை ஆசிரியர், நடிகர், ஓவியர், கவிஞர் எனப் பல பரிமாணங்களில் மக்களை மகிழ்வித்தவர் கிரேஸி மோகன். ஒரு படத்தை பார்த்தால் அதில் வரும் வசனங்களை வைத்து மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி தன்னுடைய வசனங்களை வைத்தே இவர்தான் வசனம் எழுதியுள்ளார் என மக்களுக்கு அதிகளவில் அறிய வைத்தவர். இப்படி தொடர்ந்து மக்களை தனது பல பரிணாமங்களில் மகிழ்வித்த கிரேஸி மோகன் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 10-ந்தேதி காலமானார்.இது திரைத்துறையினர் மட்டுமின்றி ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், இவரது மனைவி நளினி கிரேஸி மோகன் இன்று இயற்கை எய்தினார். இவரது மறைவிற்கு திரையுலகத்தை சார்ந்த அனைவரும் இரங்கல் தெரிவித்து அவரும் நிலையில் தற்போது நடிகர் கமல்ஹாசன் பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் திருமதி. நளினி கிரேஸி மோகன் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.