







சீதா ராமம் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் பிரபலமானவர் பாலிவுட் நடிகை மிருணாள் தாகூர். மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. அந்த வகையில் தெலுங்கில் பிரபல நடிகரான நானியுடன் சேர்ந்து நானி30யில் நடிக்க பெரிய தொகையை சம்பளமாக கொடுத்திருக்கிறார்களாம்.மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மிருணாள் தாகூர். Vitti Dandu என்ற மராத்தி மொழி படம் மூலம் நடிகையானார்.இதனை தொடர்ந்து ரித்திக் ரோஷனின் சூப்பர் 30, ஃபர்ஹான் அக்தரின் தூஃபான், ஷாஹித் கபூரின் ஜெர்சி போன்ற படங்களில் நடித்த மிருணாளுக்கு துல்கர் சல்மானுடன் சேர்ந்து சீதா ராமம் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் இளவரசியாக சிறப்பாக நடித்திருந்தார் மிருணாள் தாகூர். மேலும், நானி30 படத்தில் நடிக்க மிருணாள் தாகூருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பள விபரம் வெளியாகியிருக்கி இருப்பது தென்னிந்திய சினிமாவில் அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது. நானியுடன் சேர்ந்து நடிக்க மிருணாளுக்கு கிட்டத்தட்ட ரூ. 6 கோடி சம்பளமாம். தன் முதல் தெலுங்கு படமான சீதா ராமத்தில் நடிக்க ரூ. 2 கோடி வாங்கிருந்த நிலையில் 2வது தெலுங்கு படத்தில் நடிக்க தன் சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்திவிட்டார். ஆகையால் தயாரிப்பாளரும் மிருணாள் கேட்ட சம்பளத்தை கொடுக்க ஒப்புக் கொண்டுவிட்டார்.குறிப்பாக மிருணாள் வாங்கியிருக்கும் சம்பளம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, த்ரிஷா, சமந்தா ஆகியோரின் சம்பளத்தை விட அதிகம் என்பதே. படம் ஒன்றுக்கு ரூ. 5 கோடி வாங்குகிறார் நடிகை நயன்தாரா. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஒரு படத்தில் நடிக்க ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி கேட்கிறார் த்ரிஷா. பல ஆண்டுகளாக நடித்து வரும் அவர்களை ஒரே படத்தில் சம்பள விஷயத்தில் முந்திவிட்டாரே மிருணாள் தாகூர் என ரசிகர்கள் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக நானி, மிருணாள் தாகூர் நடித்து வரும் நானி 30 படம் வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் நானி. அதில் ஒரு சிறுமி சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு நானியை கட்டிப்பிடித்திருக்கிறார். இது அப்பா, மகள் இடையேயான பாசம் பற்றிய படமாக இருக்கும் என ரசிகர்கள் கணித்துள்ளனர்.