







எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையம் உறுதி அங்கிகரித்துள்ளது. அவர் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டது சரியானதே என்றும் ஆணையம் கூறியுள்ளது.இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கி உள்ளது. ஓ பன்னீர்செல்வம் பின்னடைவை சந்தித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் இந்த தீர்ப்பால் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமிக்கு வந்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் திளைத்து இனிப்பு வழங்கி வருகிறார்கள்.