







ஒரு காலகட்டத்தில் சினிமா என்பது அவரவர் மொழிகளில் மட்டும் பார்த்து ரசித்து வந்தனர். நாகரீகம் வளர வளர மற்ற மொழி படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ‘நேரம்’ படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்’ படத்தை இயக்கி இருந்தார்.மேலும், கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்’, மலையாள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது எனலாம்.குறிப்பாக ‘பிரேமம்’ படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிலும் நல்ல பெயரை மக்களிடத்தில் பெற்றுக்கொடுத்தது. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த திரைப்படம் எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்களுக்காக கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோல்டு திரைப்படம் எதிர்பார்த்தது போல் இல்லாமல் ஒரு கலவையான விமர்சனங்களை பெற்றது.
தொடர்ந்து இவர் தயாரிப்பிலும் படங்கள் வெளிவந்தது அந்த விதத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’, ‘வீட்ல விஷேசம்’ உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்குகிறார். இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளதாக அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், மூன்றாவது முறையாக சமீபமாக இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்தேன். இந்த முறை நான் புகைப்படம் எடுக்க மறக்கவில்லை எனவும் அவரைப் பற்றி நான் விளக்க வேண்டியதில்லை. ரோமியோ பிக்சர்ஸுடன் நான் இயக்கும் படத்திற்குப் பிறகு, இளையராஜா சாருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவேன்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி சமூக வலைத்தளத்தில் வருகிறது.