







லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் லியோ. இந்த படத்தின் அப்டேட் வந்ததிருந்து ரசிகர்கள் அடுத்த கட்ட அப்டேட்க்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த விதத்தில் இத்திரைப்படம் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிவடைந்த நிலையில் இ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. அந்த வகையில் விஜய் உட்பட த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலி கான், அர்ஜுன், கௌதம் மேனன் என அனைவர்க்கும் பிடித்தமான மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே லியோ படத்தில் நடித்து வருகின்றனர்.குறிப்பாக லோகேஷ் மற்றும் விஜய் கூட்டணி, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம், அனிருத்தின் இசை போன்ற விஷயங்கள் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது எனலாம்.முக்கியமாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு போன்ற திரைப்படங்கள் என்னதான் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் கலவையான விமர்சனங்களையே மக்கள் மத்தியில் பெற்றது. ஆகா, லியோ திரைப்படம் வசூல் ரீதியாகவும், அதே சமயத்தில் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் இப்படத்தில் கடுமையாக உழைத்து வருகின்றார் விஜய். இந்நிலையில் விக்ரம் படத்தில் எப்படி உலகநாயகனை தன் பாணியில் காட்டினாரோ அதே போல லியோ படத்திலும் விஜய்யை தன் ஸ்டைலில் லோகேஷ் காட்டயிருப்பதால் இப்படம் விக்ரம் படத்தைப்போல மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதனையடுத்து ஏற்கனவே லியோ படத்தை பற்றி பல அறிவிப்புகள் வந்துவிட்டதால் அடுத்தகாக ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்த்திருப்பது இத்திரைப்படத்தின் ஆடியோ லான்ச்கான அதிகாரபூர்வ அறிவிப்புதான். இந்த அறிவிப்பு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டே வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் அவ்வப்போது இணையத்தில் சில பல தகவல்கள் கசிந்த வண்ணமே உள்ளன. அதே போல தான் சமீபத்தில் மலையாள நடிகர் லியோ ஜார்ஜ் லியோ படத்தில் விஜய்யின் அண்ணனாக நடிக்கின்றார் என ஒரு தகவல் வெளியானது. ஆனால் இதைப்பற்றி எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதே நிதஷணமான உண்மை. இந்நிலையில் தற்போது லியோ படம் குறித்து மேலும் ஒரு சில தகவல் இணையத்தில் வெளியாகியுள்ள வண்ணம் உள்ளது. அதாவது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை விஜய் மதுரை அல்லது கோவை போன்ற நகரங்களில் நடத்தவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதன் படி,பொதுவாக விஜய்யின் பட இசை வெளியீட்டு விழா என்பது சென்னையில் தான் நடந்து வருகின்றது. எனவே இம்முறை மதுரை, கோவை, திருச்சி போன்ற நகரங்களில் ஏதாவது இடத்தில் லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளாராம். இதனை லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் கூறியுள்ளார். எனவே கூடிய விரைவில் இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.