







ஐபிஎல் போட்டி ஆரம்பித்ததிலிருந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் ஒவ்வொரு போட்டியையும் கண்டுகளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று இரவு ஐபிஎல் கிரிக்கெட்டின் 29-வது லீக் ஆட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதினர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 134 ரன்கள் எடுத்தது.இதனையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்து அபாரமாக வெற்றி பெற்றது. மேலும், இந்த போட்டியை காண ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் கலந்துகொள்வது என்பது இயல்பான ஒன்று அந்த விதத்தில் ஆளுநர் தமிழிசை சவுந்தர ராஜன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் நேரில் சென்று கண்டுகளித்தனர், இவர்களுடன் அமர்ந்து நடிகர் தனுஷியும் போட்டியை நேரில் கண்டுகளித்துள்ளார். இவர்களை போலவே இந்த ஐபிஎல் போட்டியை காண நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித்தும் தனது மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக்யுடன் வந்திருந்தார். அதுமட்டுமல்லாமல், இயக்குனர் மோகன் ஜி, நடிகைகள் பிரியங்கா மோகன், சாக்ஷி அகர்வால், நடிகர்கள் நாகசைதன்யா, சதீஷ் போன்ற பிரபலங்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்து போட்டியை பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.