Take a fresh look at your lifestyle.

தமிழரசன் சினிமா விமர்சனம்

108

6 வித்தியாசத்தில் சிக்கிய ‘தமிழரசன்’ படம்..

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்து வெளிவந்துள்ள படம், ‘தமிழரசன்’.

விஜய் ஆண்டனி ( தமிழரசன் ),
ரம்யா நம்பீசன் ( லீனா ),
சுரேஷ்கோபி, ( முருகானந்தம் ), ராதாரவி ( சுகுமாரன் நம்பியார் ),
சோனு சூட் ( ராணா பிரதாப் சிங் ), ஒய்.ஜி.மகேந்திரன் ( அர்த்தனாரி ) ,
யோகிபாபு , ரோபோ சங்கர் (நம்பிராஜன் ), கஸ்தூரி ( நளினி ), சங்கீதா ( பத்மா சீனிவாசன் ), சாயாசிங், மதுமிதா கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ், சென்ட்ராயன், கும்கி அஸ்வின்,மேஜர் கவுதம், சுவாமி நாதன், முனீஸ்காந்த், ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன், மாஸ்டர் பிரணவ் (கேப்டன் பிரபாகரன் ) இயக்குனர் மோகன் ராஜாவின் மகன்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர்
இசை – இளையராஜா
பாடல்கள் – பழனிபாரதி, A.R.P ஜெய்ராம்
கலை – மிலன்
ஸ்டண்ட் – அனல் அரசு
எடிட்டிங் – புவன் சந்திரசேகர்
நடனம் – பிருந்தா, சதீஷ்.
மக்கள் தொடர்பு – மௌனம் ரவி, மணவை புவன்.
தயாரிப்பு – கெளசல்யா ராணி
கதை திரைக்கதை வசனம் இயக்கம் – பாபு யோகேஸ்வரன்
என்று ஏகப்பட்ட கலைஞர்கள்.
ஒரே ஒரு மருத்துவ மனைக்குள் மொத்த கதையையும் படமாக்கி இருக்கிறார்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி நரேன் நடித்து 2006 ஆம் ஆண்டு வெளியான நெஞ்சிருக்கும் வரை படத்திற்கும் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியுள்ள தமிழரசன் படத்தின் கதைக்கும் ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடி என்றால் அதை கண்டுபிடிப்பது மிகச் சிரமம்.

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் தமிழரசன். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கேமரா திரும்ப திசையெல்லாம் நன்கு பரீட்சையப்பட்ட நடிகர்கள். இளையராஜா இசை, எஸ்பிபி பாடிய கடைசி பாடல் என்ற விளம்பரத்துடன் ஆரம்பிக்கும் படம். அதன்பின் முழுவதும் ஏமாற்றமே.

நெஞ்சிருக்கும் வரை படத்தின் அதே கதைக்களத்தை கொண்டுள்ளது தமிழரசன் படம். படப்பிடிப்பின் போது யாரேனும் ஒருவர் இது நெஞ்சிருக்கும் வரை கதை போல் உள்ளதே என கூறியிருந்திருக்கலாம். படக்குழுவில் ஒருவர் கூட நெஞ்சிருக்கும் வரை படத்தை பார்க்கவில்லையா என கேள்வி எழுகிறது.

படத்தில் இதயம் தேவைப்படும் தன் காதலிக்காக இதயத்தை கொடுத்து மரணிக்கிறார் கதாநாயகன் நரேன். இந்தப் படத்தில் இதயம் தேவைப்படும் தன் மகனுக்காக இதயத்தை கொடுத்து மரணிக்க துணிகிறார் கதாநாயகன் விஜய் ஆண்டனி. இரண்டு படத்திலும் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கதாநாயகன்கள் மருத்துவமனை ஹைஜாக் செய்கிறார்கள். இரண்டு படத்தின் கதைக்கருவிலும் கடைசி 5 நிமிட காட்சியில் மட்டுமே வித்தியாசம்.

நெஞ்சிருக்கும் வரை படத்தின் கதையும் நரேன் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படத்தில் அப்படி சொல்வதற்கு எதுவும் சிறப்பாக தெரியவில்லை. கதை நீண்டு கொண்டே செல்கிறது. சிரிப்பூட்டாத நகைச்சுவையும், முன்னதாகவே பார்த்து ரசித்த கதையும், காட்சிகளும் என படம் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.