







தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. இதையடுத்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியானது.இந்நிலையில், அடுத்தகட்ட அப்டேட்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ‘மாவீரன்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு பதிவு ஒன்றை இணையத்தில் வெளியிட்டு அறிவித்துள்ளது.குறிப்பாக பல நாட்களுக்கு பின் அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் எனலாம்.