







பெரிய எதிர்பார்ப்போடு வெளியாகி உள்ள படம். தயாரிப்பு லைகா புரடக்சன்ஸ் & மணிரத்தினம். கல்கி எழுதியுள்ள மூலக்கதைக்கு மணிரத்தினம் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். ஜெயமோகன் வசனம், ஏ ஆர் ரகுமான் இசை, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். பொன்னியின் செல்வன் பாகம் 1 கதையின் தொடர்ச்சியாக பாகம் 2 வெளிவந்திருக்கிறது. பொன்னியின் செல்வன் பாகம் 1 -ன் பாத்திரங்கள் அத்தனைக்கும் இந்த பாகம் 2 -ல் முடிவு எழுதியிருக்கிறார்கள்.
பொன்னியின் செல்வன் என்ன ஆகிறார்? வந்திய தேவனின் கதி என்ன? நந்தினி யார்? குந்தவை யார்? என ஒவ்வொரு கேரக்டருக்கும் முடிவு சொல்லி இருக்கிறார் மணிரத்னம். மொத்த கதையையும் இந்த பாகத்தோடு முடிப்பதற்காக இந்தப் படத்தில் கதையை டம் செய்திருக்கிறார் மணி. இடைவேளை வரை ஏனோ தானோ என்று செல்லுகின்ற படம், இடைவேளைக்குப் பிறகு முழுமை பெறுகிறது. நந்தினியாக வரும் ஐஸ்வர்யா ராய், விக்ரமின் ஒருதலை காதலுக்கு என்ன ஆகிறார்? என்பது சோகத்தின் சோகமாக உள்ளது. சாக்ரடீஸ் வரும் ஜூலியஸ்சர் போல் விக்ரம் தனது திறமையை அந்த காட்சியில் காட்டி இருக்கிறார். அழகு தேவதையான ஐஸ்வர்யா ராய் கண்கள் அழும்போது நமது கண்களும் குளமாகி விடுகிறது. குந்தவை திரிஷாவுக்கு வேலை இல்லை என்றாலும் பார்ப்பதற்கு பாந்தமாக இருக்கிறார். இந்த படத்தில் கலை இயக்குனர் தோட்டா தரணி, இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், எடிட்டர் ஆகியோரை முக்கியமாக பாராட்டியே ஆக வேண்டும். மணிரத்தினத்திற்கு தோல் கொடுத்து இருக்கிறார்கள். எதிர்பார்த்த அளவுக்கு படம் சூப்பரோ சூப்பராக இல்லை என்றாலும் ஓகே அளவுக்கு காம களியாட்டமாக இருக்கிறது, ரேட்டிங் 4/5