Take a fresh look at your lifestyle.

‘துரிதம்’ படத்திற்காக ஆண்ட்ரியா பாடிய "நில்லாமலே.." பாடலுக்கு வரவேற்பு

46

ஆண்ட்ரியா குரலில் வெளியான ‘துரிதம்’ பர்ஸ்ட் சிங்கிள் ; ஜூன் மாதம் பட வெளியீடு

இயக்குநர் ஹெச்.வினோத்தின் சீடரான சீனிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘துரிதம்’. தமிழ் சினிமாவில் ரொம்பவே அரிதாக வெளியாகும் ரோடு மூவி ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் சண்டியர் பட நாயகன் ஜெகன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஈடன் நடித்துள்ளார்.

முக்கிய வேடங்களில் இயக்குனர் ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், மறைந்த நடிகர் பூ ராமு ஆகியோர் நடிக்க வில்லனாக ராமச்சந்திரன் (ராம்ஸ்) நடித்துள்ளார்.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் உளுந்தூர்பேட்டையை மையமாக வைத்து சென்னை, சேலம், மதுரை உள்ளிட்ட நெடுஞ்சாலைகளில் பல நாட்கள் படமாக்கப்பட்ட்டுள்ளது.

இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஹெச்.வினோத் படத்தை பாராட்டியதுடன் படம் ரிலீஸ் தொடர்பாக சில ஆலோசனைகளையும் படக்குழுவினருக்கு வழங்கியுள்ளார்.

இந்தப்படத்திற்காக அறிமுக இசையமைப்பாளர் அமுதன் ஆத்ம சாந்தி இசையமைப்பில் ஆண்ட்ரியா பாடிய “நில்லாமலே..” என்கிற பர்ஸ்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு நரேஷ் என்பவர் பின்னணி இசையமைத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் படத்தை திரையரங்குளில் வெளியிட திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு ; ஜெகன்

இயக்கம் ; சீனிவாசன்

இசை ; அமுதன் ஆத்ம சாந்தி & நரேஷ்

ஒளிப்பதிவு ; வாசன்

படத்தொகுப்பு ; நாகூரான்

ஆக்சன் ; மணி

மக்கள் தொடர்பு ; KSK செல்வா

—————–