Take a fresh look at your lifestyle.

1982 அன்பரசின் காதல்-திரை விமர்சனம்

92

மளையாள குழுவினர் எடுக்கும் படம் என்றாலே அதில் சரக்கு இருக்கும்.அந்த வரிசையில் இந்த படமும் சேரும்.

கேரள எல்லையோரம் வசிக்கும் தமிழக இளைஞன் ஆஷிக் மெர்லி னும் மலையாள பெண் சந்தனாவும் நட்பாக பழகுகிறார்கள். சந்தனா மீது அஷிக் மெர்லினுக்கு காதல் வருகிறது. ஆனாலும் மூன்று வருட மாக காதலை வெளிப்படுத்தாமலே இருக்கிறார்.

இந்த நிலையில் ஆஷிக் மெர்லினை சந்தனா போனில் தொடர்பு கொண்டு தன்னை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லும்படி கூறுகிறார்.

ஆஷிக் மெர்லினும் கேரளா சென்று சந்தனாவை அழைத்துக் கொண்டு மலைக்காடுகள் வழியாக பயணிக்கும்போது ரவுடிகள் மறிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பி ஒடுகின்றனர்.

‘உல்லாஷ் சங்கர் இருவரையும் காப்பாற்றி தனது இருப்பிடத்துக்கு அழைத்து செல்கிறார். அங்கு அவர்களை உல்லாஷ் சங்கர் முறைத்து | பார்க்க பயந்து மீண்டும் தப்பி ஓடுகிறார்கள். அவர்களை விடாது துரத்தினார்களா? என்ன ஆனது? உல்லாஷ் சங்கர் யார்? என்பது மீதி கதை.

ஆஷிக் மெர்லின் காதல் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தும் இளம் காதலனாக துறுதுறுவென வருகிறார். காதலி நினைவாக நிலைமறந்து இருப்பது, போன் அழைப்புக்காக காத்திருப்பது என்று காதல் தவிப்புகளை வெளிப்படுத்துகிறார். ரவுடிகளிடம் இருந்து தப்பிக்க காதலியை இழுத்துக்கொண்டு காட்டுக்குள் ஓடும் காட்சி நிமிர வைக்கிறது. சந்தனா அழகும் கவர்ச்சியுமாய் வசீகரிக்கிறார்
தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்.நயன்தாரா வரிசையில் அமருவார். அவரது காதலியாக வரும் அருணிமா ராஜ் சிரிப்பிலும் நடிப்பிலும் அம்சம்.

துப்பாக்கி செய்யும் நீளமான காட்சிகள் சலிப்பை தருகிறது. சிந்தாமணி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். செபாஸ்டியன் கேமரா மலை பிரதேசத்தின் அழகை அள்ளியுள்ளது.

இரண்டு வெவ்வேறு காதல் கதையை திகில் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி கவனிக்க வைக்கிறார் இயக்குனர்.
தொழில் நுட்பம் இயக்கம் விறுவிறுப்பாக உள்ளது.