சத்ய ஜோதி’ T.G. தியாகராஜன், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்வு

*‘சத்ய ஜோதி’ T.G. தியாகராஜன், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (Tamil Film Active Producers Association) தலைவராக ஒரு மனதாக தேர்வு.*

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், ஆகஸ்ட் 2020-ல் ‘இயக்குனர் இமயம்’ திரு. பாரதிராஜா அவர்களால், பல முன்னணி தயாரிப்பாளர்களுடன் இணைந்து தோற்றுவிக்கப்பட்டது. இன்று இந்த சங்கம் 365-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பெரிய சங்கமாக வளர்ந்து தனது உறுப்பினர்களுக்கு பல சேவைகளை செய்து வருகிறது.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளம் (FEFSI) மற்றும் அதை சார்ந்த அனைத்து சங்கங்களுடனும், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கங்களுடன் இணைந்து சிறப்பாக செயலாற்றி வருகிறது. அதனால் தான், இன்று இந்த சங்கத்தை மத்திய அரசும், மாநில அரசும் அங்கீகரித்து, சினிமா துறை சார்ந்த அனைத்து கலந்துரையாடல்கள் மற்றும் முடிவுகளில் இணைத்துள்ளனர். தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம், திரைப்பட தலைப்பு, விளம்பர அனுமதி மற்றும் உறுப்பினர்களுக்கு தேவைப்படும் அனைத்து சேவைகளையும் துரிதமாக வழங்கி வருகிறது. அதன் காரணமாக தான், ஒவ்வொரு மாதமும் பல புதிய உறுப்பினர்கள் சங்கத்தில் இணைந்து வருகிறார்கள். மேலும், இந்திய சினிமாவில் முதன் முறையாக தயாரிப்பாளர் சங்கமே ஒரு திரைத்துறை வழிகாட்டி நூலை (Trade Guide) ஒவ்வொரு மாதமும் கொண்டு வருகிறது. அதன் மூலம் பல தயாரிப்பாளர்களுக்கும், திரைத்துறைக்கு தேவைப்படும் அனைத்து விபரங்களும் தெரிவிக்கப்படுகின்றன.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து, புதிய நிர்வாக குழு அமைக்க வேண்டும். அதன் படி, 2025-28-க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, மதிப்புக்குரிய இயக்குனர் திரு.R.V. உதயகுமார், தேர்தல் அதிகாரியாக சங்கத்தால் நியமிக்கப்பட்டு, தேர்தல் நடைபெற்றது. தகுதி உள்ள 7 அலுவலக நிர்வாகிகள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக, எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் விபரம் பின் வருமாறு.

தலைவர் : திரு. T.G. தியாகராஜன்
பொதுச் செயலாளர் : திரு. T. சிவா
துணைத் தலைவர்கள் : திரு. S.R. பிரபு & S.S. லலித் குமார்
பொருளாளர் : திரு. G. தனஞ்ஜெயன்
இணைச் செயலாளர்கள் : திரு. முகேஷ் R. மெஹ்தா & திரு. S. வினோத் குமார்

செயற்குழு உறுப்பினர்கள்: இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் திரு. K.S.ரவிக்குமார், திரு. சுந்தர் C, திரு. விக்னேஷ் சிவன், திரு. R. கண்ணன், தயாரிப்பாளர்கள் திரு. ரமேஷ் P.பிள்ளை, திரு. S. லக்ஷ்மன் குமார், திரு. சுதன் சுந்தரம், திரு. கமல் போஹ்ரா , திரு.கார்த்திகேயன் சந்தானம் மற்றும் திரு. நிதின் சத்யா
தேர்ந்தெடுக்கப்பட்டதயாரிப்பாளர்களுக்கான நியமன கடிதத்தை தேர்தல் அதிகாரி இயக்குனர் திரு.R.V. உதயகுமார், சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு T. சிவா-விடம் தந்தார். புதிய நிர்வாக குழு மேலும் சிறப்பாக செயல்பட தனது வாழ்த்துக்களை அவரிடம் தெரிவித்தார்.

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிறுவனர் திரு. பாரதிராஜா அவர்களின் வழிகாட்டுதலுடன், திரைத்துறையின் அனைத்து சங்கங்களின் ஆதரவுடன், மேலும் சிறப்பாக செயல்படவும், பல புதிய முயற்சிகளை தொடங்கவும் புதிய நிர்வாக குழு உறுதி கொண்டிருக்கிறது.

சங்கத்தின் ஊடக/பத்திரிக்கை தொடர்பாளர்: திரு. நிகில் முருகன்

kollywood newssathiy Jothitamil cinema newstamil film newsthiyagarajan
Comments (0)
Add Comment