அர்ஜுன் தாஸ் நடிக்கும் புது படம் துவக்கம்

தள்ளுவண்டி காய்கறி வியாபாரி யோகிபாபு இந்த படத்தில் நடிக்கிறார்

*அர்ஜுன் தாஸ் , நடிகை அன்னா பென் & யோகிபாபு நடிப்பில், ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், பூஜையுடன் இனிதே துவங்கியது!!*

முன்னணி இளம் நட்சத்திர நடிகர் அர்ஜுன் தாஸ், மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவை நடிகர் யோகிபாபு, ஆகியோர் நடிப்பில், பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ( Power House Pictures) சார்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் எழுதி, இயக்க, புதுமையான களத்தில் உருவாகும் ஃபேமிலி எண்டர்டெயினர் படத்தின் பூஜை, படக்குழுவினர் கலந்துகொள்ள இன்று இனிதே நடைபெற்றது.

அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், புதுமையான களத்தில், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படமாக, இப்படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ்.

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வரும் இளம் நட்சத்திர நடிகர் அர்ஜூன் தாஸ் மற்றும் மலையாள முன்னணி நடிகை அன்னா பென் ,நகைச்சுவையில் கலக்கி வரும் யோகிபாபு உடன், மற்றும் வடிவுக்கரசி என நால்வரும் இப்படத்தின் முதன்மைப் பாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த நால்வரைச் சுற்றித் தான் படத்தின் மொத்தக்கதையும் பின்னப்பட்டுள்ளது.

இப்படத்தின் பூஜையை தொடர்ந்து சென்னை, மங்களூர், மும்பை ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

தமிழில் தொடர் வெற்றிப்படங்களை தந்து வரும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

படத்தின் தலைப்பு மற்ற விபரங்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

தொழில்நுட்ப குழு

இயக்கம் – ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு – பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
ஒளிப்பதிவு – அரவிந்த் விஸ்வநாதன்
எடிட்டிங் – அருள் மோசஸ்.A
இசை – ஷான் ரோல்டன்
கலை இயக்கம்- ராஜ் கமல்
உடை வடிவமைப்பு – நவா ராம்போ ராஜ்குமார்
ஸ்டண்ட் – Action சந்தோஷ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

anna benarjun dasskollywood newstamil cinema newstamil film newsyogi babu
Comments (0)
Add Comment