நடிகர் விஜய்யின், ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் சென்சாரில் சிக்கியுள்ள பிரச்சனையை மையப்படுத்தி, மாண்புமிகு பாரத பிரதமர் மோடிஜியை மிகத் தவறாக விமர்சித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கும் கருத்துக்கள் மிக மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மத்திய தணிக்கை வாரியம் சுதந்திரமாக இயங்கும் தனி அமைப்பு, தணிக்கை விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் விஜய்யின் படத்துக்கு சான்றிதழ் கிடைத்து விடப் போகிறது. ஆனால், விதிகளுக்குப் புறம்பாக, ஆட்சேபனைக்குரிய வகையில் இருந்திருப்பதால்தான் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.
சென்சார் போர்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு கலைத்துறை மீது காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்வதும், கலைத்துறையை முடக்குவதும், கலைத்துறையினரை மிரட்டுவதும் காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்குத்தான் கை வந்த கலை!
திமுக கூட்டணியில் இருந்து வெளியேற காரணம் தேடி அலையும் ராகுல் காந்தி, திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க நினைக்கிறார். அதற்காக, கிரிஷ் சோடங்கர் வழியாக விஜய்க்கு ஆதரவாகப் பேசவே, மாண்புமிகு பாரத பிரதமர் மோடிஜியை அவதூறாக விமர்சித்திருக்கிறார்.
‘குற்றப்பத்திரிக்கை’ படத்துக்கு சோனியா காந்தி ஏற்படுத்திய சிக்கலை மறந்துவிட்டு பாஜக மீதும், பாஜக தலைவர்கள் மீதும் அவதூறு பரப்பினால் அதன் விளைவுகளை காங்கிரஸ் சந்திக்க வேண்டியதிருக்கும்.
மாண்புமிகு பாரத பிரதமர் மோடிஜி மீது அவதூறு பரப்பிய கிரிஷ் சோடங்கரை வன்மையாக கண்டிக்கிறோம்.
நன்றி
கராத்தே தியாகராஜன்
Karate R. Thiagarajan
STATE SECRETARY
TAMIL NADU BJP
FORMER MAYOR (I/C) CHENNAI CITY