பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ராஜா சாப்,
அந்த காலத்தில் விட்டலாச்சாரியார் ஜகன்மோகினி போன்ற மந்திர தந்திரங்கள் நிறைந்த படங்களை இயக்கி வெற்றி பெற்றார் அதில் ஜெயமாலினி என்ற கவர்ச்சி நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் தெலுங்கு மொழியில் வெளிவந்த இந்த மாதிரி படங்கள் அப்பொழுது வெற்றி பெற்றது
அதே பாணியில் இப்பொழுது ராஜா சாப் என்கிற படத்தை பிரபாஸ் நடிக்க உருவாக்கி இருக்கிறார்கள். மந்திர தந்திரங்கள் நிறைந்த காட்சிகளை ஏஐ உதவியுடன் சிறப்பாக பண்ணியிருக்கிறார்கள்..
என்ன மனதில் நினைக்கிறார்களோ அதை எல்லாம் காட்சிப்படுத்தி இந்த படத்தில் காட்டி இருக்கிறார்கள் நம்ப முடியாத காட்சிகளாக இருந்தாலும் ஏஐ உதவியுடன் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் எதையோ எதிர்பார்த்து செல்லக்கூடாது தெலுங்கு படம் என்றாலே முன்பெல்லாம் இது மாதிரி டுபாக்கூர் படங்கள் தான் வந்து கொண்டிருக்கிறோம் அந்த வரிசையில் இதுவும் இணைந்து இருக்கிறது..
பிரபாஸ் பல இடங்களில் நகைச்சுவை தடும்ப வசனம் பேசி நடித்திருக்கிறார் அவருக்கு ஜோடியாக மூன்று நடிகைகள். நன்றாக கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார்கள்.. காமெடியனாக நான்கு பேர் வருகிறார்கள் . அவர்கள் நடிப்பு காசு கொடுத்தால் காசு கொடுத்தால் கூட சிரிக்க முடியாது போலிருக்கிறது.
பாடல் காட்சிகளை பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள் .பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது.
பிரபாஸ் படம் என்றாலே நம்ப முடியாத கதை திரைக்கதை உள்ள படமாக தான் இருக்கும் ஆனாலும் பிரம்மாண்டம் இருக்கும் அதேபோல் தான் இந்தப் படமும் உள்ளது பொழுதுபோக்கிற்கு ஓகே.
இதற்கு நம்முடைய மதிப்பெண் 3/5