சீதா பயணம் -பட விமர்சனம்

கதை திரைக்கதை வசனம் டைரக்ஷன் தயாரிப்பு ஆகியவற்றை நடிகர் அர்ஜுனே ஏற்று இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். ஒரு சிறிய ரவுடி வேடத்திலும் நடித்திருக்கிறார்.

ஒரு இளம் பெண் ஒரு வேலையாக மதுரைக்குச் செல்கிறார். வழியில் லிபட் கேட்கும் ஒருவரையும் ஏற்றி செல்கிறார். மதுரையில் அந்தப் பெண் அடைந்ததும் ஒரு விபத்து நடக்கிறது. அந்த விபத்து தன் உயிரை காப்பாற்றியது எது என்பதை உணர்ந்து அதற்கு காரணமானவர்களுக்கு நன்றி கூறுகிறார். அப்பொழுது லிப்ட் கேட்டு காரில் வந்த ஒரு இளைஞருக்கும் இவருக்கும் காதல் ஏற்படுகிறது. அந்த காதல் கை கூடியதா? கல்யாணத்தில் முடிந்ததா?  என்பதுதான் படத்தின் கதை.

நிரஞ்சன் ஐஸ்வர்யா ஜோடி இளமை துள்ளளோடு பல காட்சிகளில் நடித்துள்ளார்கள்.

சண்டைக் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் எல்லாம் புகுந்து விளையாடி இருக்கிறார் ,நிரஞ்சன். நல் வரவு.

ஐஸ்வர்யா, அப்பா சத்யராஜ் உடன் கண் கலங்கும் போதும் காதல் வயப்படும் போதும் அமைதியான நடிப்பால் அசத்தியிருக்கிறார்.

பிரகாஷ் ராஜ் தாத்தாவாக வந்து தனக்கே உரிய பாணியில் பாசத்தை, கூட்டுக் குடும்பத்தனாக வீசியிருக்கிறார்.

சத்யராஜ் மனைவியை இழந்த கணவனாக தனது மகளுக்கு தாயாக இருந்து வளர்த்து கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார். மகளை அழைத்துக் கொண்டு மதுரை சென்று பாஸ்போர்ட்டை கொடுக்க அலையும் அந்த காட்சியில் பாசத்தை பொழிகிறார்.

அர்ஜுன் காசுக்கு கொலை பண்ணும் ரவுடியாக வந்து கடைசியில்  திருந்தும் ரவுடி கேரக்டரில் அசத்தி இருக்கிறார்.

துருவ சார்ஜா ஒரு சண்டைக் காட்சிகள் வந்து துவ அம்சம் செய்து விட்டு போகிறார்.

அர்ஜுன் தன் மனதில் பட்டதை எல்லாம் படத்தில் வைத்திருக்கிறார் . போதனைகள் அதிகம். அப்பா அம்மாவுக்கு பாசமுள்ள பிள்ளையாக நடக்க வேண்டும், கோமாதாவை வணங்க வேண்டும் எல்லாமே அந்த ஆஞ்சநேயர் தான் என்பது போல் சொல்லி திணிக்கிறார்.

ஒரு வழக்கமான காதல் கதையை தலையை சுற்றி மூக்கை தொடும் பாணியில் உருவாக்கி இருக்கிறார், அர்ஜுன். அதுமட்டுமில்லாமல் மகள் சகோதரி மகன் என்று குடும்பத்தினரின் எல்லோரையும் நடிக்க வைத்து குடும்பப் படமாக எடுக்க முயற்சித்திருக்கிறார். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கிறார் அர்ஜுன்.

இதற்கு நம்முடைய மதிப்பெண் 3.5/10

*Seetha Payanam Movie Cast & Crew Details*

 

Banner: Sree Raam Films International

 

Story – Screenplay – Produced & Directed By: Arjun

 

Cast:

Niranjan

Aishwarya Arjun

Arjun, (in a Guest Role)

Dhruva Sarja (in a Special Camio)

Prakash Raj

Sathya Raj

Kovai Sarala

 

Music: Melody King Anup Rubens

Cinematography: G. Balamurugan

Editor: Ayoob Khan

Line Producer: UL. Murthy

Art Directors: Mohan B Kere, Shiva Kamesh D, CH Krishna

Fights Designed By: Arjun Sarja

Stunts: Kickass Khalee

Sound Design: Raghunath Kamisetty

VFX: Hocus Pocus (Chennai)

DI Colourist: Venkat Gadi (Sarathi Studios)

Dolby Atmos Mix: L. Satish Kumar DFT (Sarathi Studios)

Publicity Designs: Define Studio

PRO: Sathish (AIM)

Digital Marketing: Vivek Amirtha Lingam

Aiswaryaarjunpragash rajsathyarajSeetha payanam
Comments (0)
Add Comment