விஜய் அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் பின்னுக்கு தள்ளப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து: வலுக்கும் கண்டனம்

ஊடகச் செய்தி/ அறிக்கை

 

மதிப்புமிகு செய்தி ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

 

இன்று 21 05 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை விரிவாக்கத்தின் அரசு விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாவதாக படப்பட்டு அவமதிக்கப் பட்டு உள்ளது,

 

13 வது தமிழ்நாடு முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் திரு சி.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு கடந்த

10/05/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பொறுப்பேற்ற விழாவில் ஆண்டாண்டு காலமாக மரபுவழியாக பின்பற்றி வரும் நடைமுறை அரசு விழாக்களில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடி முடித்து நிகழ்ச்சி நிரல் நடைபெற்று முடிந்து இறுதியாக தேசியகீதம் பாடப்பட்டு முடிப்பது வழக்கம்,ஆனால் சமஸ்கிருத மொழியில் வந்தேமாதரம் பாடப் பட்டு வங்க மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு தமிழாய்ந்த தமிழ் நாட்டின் உயர்தனி செம்மொழியாம் தமிழ்த் தாய் வாழ்த்து இறுதியாக பாடப்பட்டது கண்டணத்திற்கு உள்ளானது,

 

அதேபோன்று இன்றும் 21/05 /2026 வியாழக்கிழமை ஆளுநர் மக்கள் மாளிகையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சரவை விரிவாக்கத்தின் போதும் தமிழ்த் தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டு அவமதிப்பு செய்யப் பட்டுள்ளதை மானமுள்ள தமிழர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள்.

 

இதை புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசும் தமிழக அரசியல் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் ஒன்றிய பாஜக அரசின் மும்மொழி கொள்கையை கடுமையாக எதிர்த்திட வேண்டும் என்று திராவிட வெற்றிக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

 

என்றும் மறுமலர்ச்சிப் பாதையில்…

 

மல்லை சி ஏ சத்யா

தலைவர்

திராவிட வெற்றிக் கழகம்

21 /05 /2026

CM VijayMinisterstamilnadu
Comments (0)
Add Comment