தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு மின்சாரம் போதிய அளவு தரவில்லையா? பாராளுமன்றத்தில் கமலஹாசன் கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

கர்நாடக அரசுக்கு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட அனுமதி கிடைக்காது- மத்திய அரசு பதிலில் கருத்து

இன்று (03.08.2026) மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்கள்,

 

மத்திய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் மின்சார அமைச்சகம் ஆகிய இரண்டு துறையிடமும்,

 

எழுத்துப் பூர்வமாக கேட்ட இரண்டு கேள்விகளுக்கு, இரண்டு அமைச்சகங்களும் பதிலளித்துள்ளன.

 

கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அளிக்கப்பட்ட பதில்களும்:-

 

ஜல் சக்தி அமைச்சகம் (மத்திய நீர் வள அமைச்சகம்)

 

நீர் வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை

 

ராஜ்யசபா (மாநிலங்களவை) நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி எண்: 1666 பதில் அளிக்கப்பட்ட நாள்: 03.08.2026

 

தலைப்பு: காவிரி ஆற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்தல்

 

உறுப்பினர் திரு. கமல்ஹாசன் கேட்ட கேள்விகள்:

 

• (அ) மேகதாட்டு திட்டத்திற்காக திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை (DPR) கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ளதா? மேலும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் (CWMA) கருத்துக்கள் எதையும் தெரிவித்து அதை முன்னோக்கி அனுப்பியுள்ளதா?

• (ஆ) இந்தத் திட்டத்தால் காவிரியின் கீழ்நிலை மாநிலமான தமிழ்நாட்டின் பாசன வசதி மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா என்பதை மத்திய அரசு ஆய்வு செய்துள்ளதா? அதன் முடிவு என்ன?

• (இ) காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் 2018 காவிரி நீர் மேலாண்மைத் திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு நடந்துகொண்டால் மட்டுமே இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படுமா?

• (ஈ) கர்நாடகாவின் திருத்தப்பட்ட திட்ட அறிக்கை குறித்து தமிழ்நாட்டின் கருத்துக்களை மத்திய அரசு பரிசீலித்துள்ளதா? விவரங்கள் என்ன?

 

 

 

பதில்

 

மத்திய ஜல் சக்தித் துறை இணையமைச்சர் (திரு. ராஜ் பூஷன் சௌத்ரி) அளித்த பதில்:

 

(அ) முதல் (ஈ) வரை:

 

கர்நாடக அரசு 2019-ஆம் ஆண்டு சமர்ப்பித்த மேகதாட்டு அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (DPR), திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் (CWC) வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கர்நாடக அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

 

இதுவரை திருத்தப்பட்ட புதிய திட்ட அறிக்கை மத்திய நீர் ஆணையத்திற்கு வந்து சேரவில்லை.

 

காவிரிப் படுகையில் அமையும் நீர் திட்டங்களுக்கான திட்ட அறிக்கைகளை (DPR) மத்திய நீர் ஆணையம் பரிசீலிக்கும் போது:

 

• மத்திய நீர் ஆணையத்தின் நடைமுறை வழிகாட்டுதல்கள்,

 

• காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு,

 

• 16 பிப்ரவரி 2018 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

 

ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்யும்.

——————————–

 

இந்திய அரசு – மின்சார அமைச்சகம்

 

ராஜ்யசபா (மாநிலங்களவை) நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி எண்: 1743 பதில் அளிக்கப்பட்ட நாள்: 03.08.2026

 

தலைப்பு: தமிழ்நாட்டில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்தல்

 

உறுப்பினர் திரு. கமல்ஹாசன் கேட்ட கேள்விகள்:

 

• (அ) கடந்த 5 ஆண்டுகளில் மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்ட மின்சாரத்தின் அளவு எவ்வளவு (ஆண்டு வாரியாக)?

 

• (ஆ) தமிழ்நாட்டின் உச்சகட்ட மின் தேவையை பூர்த்தி செய்ய இந்த மின் ஒதுக்கீடு போதுமானதா என்று மத்திய அரசு ஆய்வு செய்ததா? அப்படி எனில் அதன் முடிவு என்ன?

 

• (இ) தமிழ்நாட்டின் மின் உற்பத்தி மற்றும் மின்கோபுரத் திட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ள கோரிக்கைகளின் நிலை என்ன?

 

• (ஈ) தமிழ்நாட்டில் மின் விநியோக கட்டமைப்பைப் பலப்படுத்தவும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை (சூரிய ஒளி, காற்று மின்சாரம்) இணைக்கவும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது?

 

• (உ) தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்யவும், மின்சார நம்பகத்தன்மையை உயர்த்தவும் மத்திய அரசு வழங்கும் உதவிகள் என்ன?

 

பதில்

 

மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி துறை இணையமைச்சர் (திரு. ஸ்ரீபத் நாயக்) அளித்த பதில்:

 

(அ) மற்றும் (ஆ): 2003-ஆம் ஆண்டு மின்சாரச் சட்டத்தின்படி, இந்தியாவில் மின்நிலையம் அமைப்பதற்குப் பிரத்யேக உரிமம் (License) எதுவும் தேவையில்லை. தொழில்நுட்ப விதிகளைப் பின்பற்றும் எந்தவொரு நிறுவனமும் மின்நிலையத்தைத் தொடங்கி நடத்தலாம்.

 

ஒவ்வொரு மாநிலமும் தங்களின் மின் தேவையை கணக்கிட்டு, மத்திய மின் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் மின்சாரத்தை ஒப்பந்தம் செய்துகொள்கின்றன.

 

• இணைப்பு-I (Annexure-I): கடந்த 5 ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் தமிழ்நாட்டின் உச்சகட்ட மின் தேவை மற்றும் வழங்கப்பட்ட மின்சாரத்தின் விவரங்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

 

• இணைப்பு-II (Annexure-II): மத்திய மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மின்சாரத்தின் விவரங்கள் இதில் உள்ளன.

 

• (இ) முதல் (உ) வரை: தமிழ்நாடு அரசின் மின் உற்பத்தி மற்றும் மின்கோபுரத் திட்டங்கள் எதுவும் மத்திய மின் அமைச்சகத்தில் நிலுவையில் இல்லை.

 

• பச்சை ஆற்றல் பாதை (Green Energy Corridor): மாநிலத்திற்குள்ளான மின் கடத்தி அமைப்புகளைப் பலப்படுத்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

 

• மாநிலங்களுக்கு இடையேயான மின் இணைப்பு (ISTS): 8.38 கிகாவாட் (GW) அளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இணைக்கத் திட்டமிடப்பட்டு, அதில் 2.38 கிகாவாட் திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.

 

• மின் அமைப்பு மேம்பாட்டு நிதி (PSDF): தமிழ்நாட்டில் துணை மின்நிலையங்களைப் புதுப்பிக்க, தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்பை ஏற்படுத்த மற்றும் பேட்டரி சேமிப்பு அமைப்புகளை (BESS) அமைக்க ₹785.21 கோடி மானியத்தில் 10 திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

 

• மின் விநியோகத் திட்டம் (RDSS): ஜூலை 2021-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிற்கு ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த ₹19,235 கோடியும், மின் விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்க ₹9,568 கோடியும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 

இணைப்பு – I: தமிழ்நாட்டின் உச்சகட்ட மின் தேவை மற்றும் விநியோக விவரம்

 

நிதியாண்டு

 

உச்சகட்ட மின் தேவை (MW)

 

பூர்த்தி செய்யப்பட்ட தேவை (MW)

 

பூர்த்தி செய்யப்படாத தேவை (MW)

 

பற்றாக்குறை (%)

 

2021-22

 

16,891

 

16,891

 

0

 

0.0%

 

2022-23

 

17,729

 

17,729

 

0

 

0.0%

 

2023-24

 

19,045

 

19,045

 

0

 

0.0%

 

2024-25

 

20,784

 

20,784

 

0

 

0.0%

 

2025-26

 

19,932

 

19,932

 

0

 

0.0%

 

2026-27 (ஜூன் 2026 வரை)

 

21,000

 

21,000

 

0

 

0.0%

 

 

 

(MW = மெகாவாட்; தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் மின் பற்றாக்குறை எதுவுமில்லை என்பதை அட்டவணை காட்டுகிறது).

 

இணைப்பு – II: மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மின்சாரம்

 

நிதியாண்டு

 

நிலையான மின்சாரம் (MW)

 

கூடுதல்/ஒதுக்கப்படாத மின்சாரம் (MW)

 

மொத்த மின்சாரம் (MW)

 

2021-22

 

6,405.0

 

620.6

 

7,025.6

 

2022-23

 

6,544.0

 

598.2

 

7,142.4

 

2023-24

 

6,139.9

 

635.2

 

6,775.1

 

2024-25

 

6,139.9

 

813.1

 

6,953.0

 

2025-26

 

6,474.8

 

629.0

 

7,103.8

 

2026-27 (ஜூன் 2026 வரை)

 

6,139.9

 

578.5

 

6,718.4

 

 

*- ஊடகப் பிரிவு,*

மக்கள் நீதி மய்யம்.

indiakamal hassanparliamentTamil newstamilnadu
Comments (0)
Add Comment