கொளத்தூர் எம் எல் ஏ பாபு காலமானார், தலைவர்கள் இரங்கல்

கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ். பாபு அவர்கள் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது.

 

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தவெக கட்சித் தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

திரு. வி.எஸ். பாபு அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் சாந்தி!

 

கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு மறைவுக்கு இரங்கல்.

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சென்னை கொளத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

70 நாள்களுக்கு மேலாக மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்த அவரது உடல்நிலை தேறி வருவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், அவரது மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபு அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், கொளத்தூர் தொகுதி மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

-அன்புமணி ராமதாஸ்

VS Babu
Comments (0)
Add Comment