முகத்தில் கரையை பூசி கொண்ட ஹீரோ

ஆடியோ மற்றும் டிரைலர் ரிலீஸின் ..போது முகத்தில் கரியை பூசி கொண்ட
ஹீரோ யார்..?ஏன்..?
அண்மையில் ட்ரெய்லர் ரிலீஸ் மற்றும் ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன் பிரபல தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. அதில் நடித்த ஹீரோ முகத்தில் ஒரு பக்கம் முழுக்க முழுக்க கருப்பு பெயிண்ட் அடித்து வந்திருந்தார்… இது என்ன பப்ளிசிட்டி ஸ்டென்டா ..? என்று அனைவரும் புருவத்தை உயர்த்திய போது..? அதன் தயாரிப்பாளரான தனஞ்ஜெயன் ரகசியத்தை போட்டு உடைத்தார்..! ஆம் ,விஜய் ஆண்டனி படத்தில் நடிக்கும் போது முடித்தவுடன் பணத்தை வாங்கினோம்..! என்று வீட்டில் அமர்ந்து கொள்ளாமல் அல்லது மற்ற திரைப்படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது ..?தான் நடித்த திரைப்படம் மக்கள் மத்தியில் சேர வேண்டும்..!..? என்பதற்காக..? எத்தனை முறை கூப்பிட்டாலும்..!( இது இரண்டாவது முறையாக ஒரே இடத்தில் நடத்தப்பட்டது).. அதில் நடித்த மற்ற பிரபலங்கள் குறிப்பாக சத்யராஜ், சரத்குமார் (மகள் திருமண வேலையை கவனிப்பதால்)உட்பட ஹீரோயின் அல்லது பெண்வாடயே.. இல்லாத நடந்த ஒரு பங்க்ஷன்..? அப்போதுதான் தெரிந்தது ..?பப்ளிசிட்டி ப்ரொமோஷன் பங்க்ஷனில் கலந்து கொள்ள வேண்டும் அதே சமயத்தில் படபிடிப்பை விட்டு விடக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பின் இடைவேளையில் அதே மேக்கப் உடன் வந்தார். காரணம் இந்த மேக்கப்பை கலைப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாகும். திரும்ப போடுவதற்கு ஒரு மணி நேரமாகும். தயாரிப்பாளர் நஷ்டப்பட்டு விடக்கூடாது ..!(என்ன ஒரு புத்திசாலித்தனம்.. இரக்க குணம்.. பொறுப்பான தன்மை)என்பதற்காக முகம் விகாரமாக இருந்த போதிலும் ..கலந்து கொள்ள வேண்டும் !என்ற ஆர்வத்துடன் கலந்து கொண்டதை தெரிவித்தார் !படத்தின் பெயர்” மழை பிடிக்காத மனிதன் அந்த ஹீரோ “விஜய் ஆண்டனி”

தயாரிப்பாளரை நடுத்தெருவில் நிற்க வைக்கும் பத்திரிகையாளர்கள்.
வயிறறிந்து பேசிய.
தயாரிப்பாளர் டி. சிவா..

தற்போது படங்கள் ஒரு 40 கோடி .. தியேட்டர் கலெக்ஷன் என்றால் ஓ டி டி மற்றும் சேட்டிலைட்டில் அதே அளவு விலை போகும். ஆனால் இப்பொழுது தியேட்டர் கலெக்ஷன் எதிர்பார்த்ததை விட பாதி அளவு தான் கிடைக்கிறது. அத்துடன் பத்தில் ஒரு பகுதி தான் ஓ டி டி கேட்கிறார்கள்.. ஆந்திராவில் அப்படியல்ல ..ஆனால் தமிழகத்தில் இந்த நிலை ஏற்படுகிறது காரணம் யூட்யூப் மற்றும் பத்திரிகையாளர்கள் ஒரு படத்தைப் பற்றி விமர்சிப்பதோடு நிறுத்தாமல், இதை பார்க்காதீர்கள் என்றெல்லாம் சொல்லிவிடுகிறீர்கள்.
என்ன நியாயம்? ஒரு தயாரிப்பாளர், திரைப்படத்தில் தலை மூளை அவர் இருந்தால்தான் திரைப்படம் வாழும் ..! யுடியூப் மற்றும் பத்திரிகையாளர் உட்பட.. படம் பார்க்காதீர்கள் என்று கூறிவிட்டால் அதனை நம்பி பார்ப்பவர்கள் அரை மனதுடன் பார்ப்பார்கள்.. அல்லது பார்க்காமலே விட்டுவிடுவார்கள் இதன் மூலம் தயாரிப்பாளர் தெருவில் நின்றால் அடுத்த படம் தயாரிப்பாரா? உங்கள் விமர்சனத்தை பாசிட்டிவா போட வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்பது ஒரு புறம் என்பதாலும் தயாரிப்பாளரை
வாழ விடுங்கள் பத்திரிகையாளர்கள் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.. ! என்று ஆதங்கத்தில் கூறினார்.. பத்திரிகையாளர்களுக்கு பொறுப்பை பற்றி கூறுவதற்கு அல்லது உத்தரவிடுவதற்கு இவர் யார் என்று பத்திரிகையாளர் முணுமுணுத்தது ஒரு புறம் என்றால்.. உண்மை நிலையை திறந்த மனதோடு அல்லது நீல நிறமானதோடு.. மட்டுமின்றி பூஸ்டியான உருவத்தோடு கேட்கலாமா கேட்க வேண்டாமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்தாலோ நினைத்தாலும் போதும்.. அதனை எதிர்த்தால் நாம் ஒன்று சொல்வதற்கு இல்லை

MazhaiPidikkathaManithanvijay antony
Comments (0)
Add Comment