மிர்சி சிவா கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம்,பறந்து போ. இந்தப் படத்தை ராம் இயக்கி இருக்கிறார். வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .இந்த நிலையில் இந்தப் படத்தை பற்றிய ஒரு பரபரப்பான சர்ச்சை உருவாகி இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
*ராமின் ‘பறந்து போ’ – திருட்டுக் கதையா?*
சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியில் ஹிட் படம் என்று பேசப்பட்டு, சக்சஸ் மீட் எல்லாம் வைக்கப்பட்டு, கொண்டாடப்பட்ட ‘பறந்து போ’ என்ற படத்தின் மீது கதை திருட்டு சுமத்தப் பட்டிருக்கிறது.
தன் கதையை, அதுவும் நாடகமாக போடப்பட்ட ஒரு கதையைத் திடுடிதான் ‘பறந்து போ’ படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று பகிரங்கமாக தன் முகநூல் பக்கத்தில் சுற்றம் சுமத்தி இருக்கிறார், பிரபல கதாசிரியர் “வேதம் புதிது” கண்ணன்.
அவரை நேரடியாக தொடர்பு கொள்ள முயன்ற போது, ”தான் அமெரிக்காவில் தன் பிள்ளைகள் வீட்டில் இருப்பதாகவும், கண் சிகிச்சைக்காக ஓய்வில் இருப்பதாகவும் சொன்னார்.
இதோ அவரது கதை குறித்த குற்றச்சாட்டு:
“ என்னுடைய கதை வசனத்தில் வெளியான ‘எல்.கே.ஜி. ஆசை’ என்ற நாடகத்தை தழுவி, ‘பறந்து போ’ என்ற திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. நான் தாய்நாட்டில் இல்லாததை பயன்படுத்தி கதை திருடப்பட்டு இருப்பதாக அறிகிறேன்.என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. ஒரு கதாசிரியன் சாபத்துக்கு ஆளாகாதீர்கள்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார், வேதம் புதிது கண்ணன்.
இதற்கு ‘பறந்து போ’ படத்தின் இயக்குநர், ராம் என்ன சொல்லப் போகிறார்?