மு க முத்துவுக்கு டி ராஜேந்தர் கவிதாஞ்சலி

கலைஞரின் புதல்வர் மு.க.முத்து மறைவுக்கு, டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஞ்சுகத் தாயின் புதல்வர், ஐந்து முறை இந்த நாட்டை ஆண்ட முதல்வர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் மூத்த புதல்வர் மற்றும் முத்து வேலரின் முத்தான மூத்த பேரன் இன்றைய தமிழக முதல்வராக இருக்கும் முக.ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரர் மற்றும் இன்றைய துணை முதல்வராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பாசமிகு பெரியப்பாவும், தமிழ் திரைப்பட நடிகரும் மற்றும் பாடகருமான பாசத்துக்குரிய சகோதரர் மு.க.முத்து அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி என் செவிக்கு எட்டியது, என்னுடைய மனதை வாட்டியது.

இவர் ‘பிள்ளையோ பிள்ளை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். ‘பூக்காரி’ படத்திலே பூ மணம் வீசினார். ‘அணையா விளக்கு’ படத்தில் நடித்து, கொழுந்து விட்டு எரிந்தார். மற்றும் ‘சமையல்காரன்’ ‘இங்கேயும் மனிதர்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். இவருடைய இழப்பு பேரிழப்பாகும். இவரை இழந்து வாடும் அவரது இல்லத்தார்களுக்கும், திரை உலக ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்!

இப்படிக்கு
டி.ராஜேந்தர் எம்.ஏ.,
நடிகர், இயக்குனர்,
தயாரிப்பாளர், விநியோகஸ்தர்
மற்றும் தலைவர்
தமிழ்நாடு திரைப்பட
தயாரிப்பாளர்கள் சங்கம்.

@GovindarajPro
#PRO_கோவிந்தராஜ்

@GovindarajPro

Mk muthuripp mk muthuT Rajendertr
Comments (0)
Add Comment