திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது சம்பந்தமான வழக்கில் இன்று இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது..
திருப்பரங்குன்றம் தீபத்தூனில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வு விசாரித்து வந்தது. ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகிய நீதிபதிகள் அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது ‘நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் வழங்கிய உத்தரவு ரத்து செய்ய முடியாது மலை உச்சியில் தீபம் ஏற்ற மக்களுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள் யாரும் தீபத்தூணில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகத்துடன் செல்லக்கூடாது. மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் தீபத்தூனில் தீபம் ஏற்ற வேண்டும் என்று ஜி I’ll சுவாமிநாதன் உத்தரவை உறுதி செய்தது, இரு நீதிபதிகள் அமர்வு. ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது .அந்த மனுவுக்கான தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு அளித்து வழக்கை முடித்து வைத்துள்ளது.