கவிஞர் வைரமுத்துவுக்கு ரஜினிகாந்த், மு க ஸ்டாலின் வாழ்த்து

*கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக வாழ்த்து*

 

இந்திய இலக்கியத்தில் உயர்ந்த விருதான ஞானபீட விருது கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை சந்தித்து அவர் பேசியதாவது:

 

“வைரமுத்து ஞானபீட விருது பெற்றார் என்று சொல்லப்படுவதைக் காட்டிலும், இது தமிழுக்கே ஞானபீடம் கிடைத்திருக்கிறது என்று சொல்லப்படுவதையே நான் பெரிதும் விரும்புகிறேன்,” என்றார்.

 

மேலும், “கால் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெரும் பெருமை இது,” என்றும் கூறினார்.

 

மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன், MDMK தலைவர் திரு. வைகோ, மக்களவை உறுப்பினர்கள் மாண்புமிகு ஜெகத்ரட்சகன், தமிழச்சி தங்கபாண்டியன், நடிகர் ராதாரவி மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் ஆகியோர் தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தனர்.

 

மேலும், ட்விட்டர் (X) தளத்தில் நடிகர் கமல்ஹாசன், அரசியல் தலைவர்கள் திரு. ஜி.கே. வாசன், திரு. வேல்முருகன், திரு. சீமான், திரு. தொல். திருமாவளவன், திரு. வைகைசெல்வன், திரு. பாரி வேந்தர், திரு. சண்முகம் (கம்யூனிஸ்ட்), திரு. டிடிவி தினகரன் மற்றும் நடிகர் சிவகுமார் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

கவிஞரின் மகன்கள் மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, வசந்தபவன் ரவி, வர்த்தக அணி மாநில தலைவர் காசிமுத்துமணிக்கம், ஸ்விஸ் அருள் ராசா & நாகேந்திரன், ஜெயசீலன் IAS, தமிழ் அறிஞர்கள் மற்றும் வெற்றி தமிழர் பேரவை சென்னை மாநகர செயலாளர் வி. குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

ganapeedamMk Stalinrajinikanthvairamuthu
Comments (0)
Add Comment