யோகி பாபு ஹீரோவாக நடித்து என்று விளம்பரப்படுத்தப்பட்ட தூக்குதுரை படத்தில் அவர் சில காட்சிகளை மட்டுமே வருகிறார். படம் சரியாக போகவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் படம் வெற்றி அடைந்ததாகவும் அதற்கு தேங்க்ஸ் மீட் ஒன்று அரேஞ்ச் பண்ணி நேற்று பிரசாத் லேபில் வைத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு முக்கியமான எவரையும் அழைக்கவில்லை. ஒரு சிலரை மட்டும் கூப்பிட்டு அவர்களுக்குள்ளாகவே தேங்க்ஸ் மீட் அறிவித்துவிட்டு கைத்தட்டி ரசித்து கொண்டார்கள். ஏன் அப்படி ரகசியமாக தேங்க்ஸ் மீட்டை வைக்க வேண்டும். அதே நாளில் இன்னொரு படம் லோக்கல் சரக்கு வெளியானது. அதில் தினேஷ் மாஸ்டர் ஹீரோவாகவும் மற்றொரு முக்கிய கேரக்டரில் யோகி பாபுவும் நடித்திருந்தார்கள். அந்தப் படம் நன்றாகவே இருந்தது. எஸ் பி ராஜ்குமார் அந்த படத்தை இயக்கியிருந்தார். முழுக்க காமெடியும் சென்டிமென்ட்டும் படம் நிறைவாகவே இருந்தது. தூக்குதுரை ஃபிளாப். லோக்கல் சரக்குக்கு க்ளாப்..👏