ஒரு நல்ல விஷயத்தை தெளிவாக சொல்லி இருக்கிறார், டைரக்டர் விநாயக் துரை.
ஆசைப்பட்டால் அத்தனையும் துன்பத்தில் முடியும்,நல்ல உள்ளத்தோடு இருப்பவர்களுக்கு என்றும் சிறப்பு என்பதை சொல்லுகிறார்.
ஐந்து விதமான நபர்களைக் கொண்டு படத்தை நகர்த்துகிறார் டைரக்டர். எல்லாவற்றிற்கும் ஒரு கோர்வையான முடிவை சொல்ல முயற்சித்து இருக்கிறார். சுனைனா இன்ஸ்பெக்டர் கேரக்டரில் வருபவர் ஆகியோர் தங்களுடைய பங்கை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இசை அமைப்பாளரும் ஒளிப்பதிவாளரும் படத்திற்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.
டைரக்டர் படத்தின் தயாரிப்பாளராக இருப்பதா பார்த்து பார்த்து படமாக்கி இருப்பது தெரிகிறது. இருந்தாலும் அவருடைய துணிச்சலான முயற்சிக்கு பாராட்டுக்கள்.
சில குறைகளை நிவர்த்தி செய்து இருந்தால் இது ஒரு நல்ல படமாக இருந்திருக்கும்.