நானும் ஒரு அழகி – பெண்ணியம் போற்றும் கதை

ஆக்குவதிலும் அழிப்பதிலும் ஆணிற்கு சம பங்கு உண்டு என ஆண்களை திருப்பி கேட்கும் ஒரு பெண்ணின் துணிச்சலான போராட்டத்தின் கதை.

ஒரு ஊரில், ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணிற்கு மட்டும் நடந்த கதை அல்ல. எல்லா ஊரிலும் ஏதாவது ஒரு குடும்பத்தில் பெண்களுக்கு இழுக்கு நடந்து கொண்டே இருக்கிறது.இதை முறியடித்து பெண் சமூகத்தை மாற்றி அமைக்கும் கதையும் இதுவே.

கே.சி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அருண், மேக்னா கதாநாயகன் நாயகியாக நடிக்க சிவசக்தி, சுபராமன்,ராஜதுரை, ஸ்டெல்லா இன்னும் பல நட்சத்திரங்களும் நடித்திருக்கின்றனர்.

ஒளிப்பதிவு-மகிபாலன்
மக்கள் தொடர்பு – வெங்கட்

கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை தயாரிப்பு இயக்கம்– பொழிக்கரையான்.க

இதன் படப்பிடிப்பு திருநெல்வேலி, களக்காடு, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி ஆகிய இடங்களில் இரு கட்ட படப்பிடிப்பாக 30 நாட்களில் நடைபெற்று முடிவடைந்தது.

இப்படத்தில் 3 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

கருவறை தெய்வமாக ஆசைப்பட்டேன் நானே… என்ற உறவு களுக்கிடையான பாடலும்,

விட்டுக் கொடுப்பதில்லை விட்டுக் கொடுப்பதினால் நாங்கள் கெட்டுப் போவதில்லை…எனும் சமூக விழிப்புணர் கொண்ட பாடலும் இடம்பெற்றுள்ளது.

இதன் அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டது. ஜூலை-5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளி வருகிறது.

kollywood newsNanum oru azhakitamil cinema newsTamil movie
Comments (0)
Add Comment