*மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கல்*

உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று மாலை மறைந்த நடிகர்-இயக்குநர் மனோஜ் பாரதிராஜாவின் குடும்பத்திற்கு தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர், நடிகர் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இயக்குநர் இமயம், மண்வாசனை இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனார் மனோஜ் அவர்கள் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை பெரிதும் பாதிக்கிறது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழக ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

***

Bharathi Rajakollywood newsManojRip manojtamil cinema news
Comments (0)
Add Comment