*சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படத் தலைப்பில் ‘செந்தமிழன்’ சீமான் ..!*

*சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படத் தலைப்பில் ‘செந்தமிழன்’ சீமான் ..!

‘தப்பாட்டம்’, ‘ஆண்டி இண்டியன்’,
‘உயிர் தமிழுக்கு’ ஆகிய வெற்றிப் படங்களைத்
தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் மூன் பிக்சர்ஸ், ஆதம் பாவா மற்றும்
பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் சீமானின் “தர்மயுத்தம்”

இத்திரைப்படத்தில்
செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்.கே. சுரேஷ், முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மலையாளத் திரையுலகில் பிரபலமான அனு சித்தாரா நாயகியாக
நடிக்கிறார்.

இவர்களுடன் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிக் குமரன் , சாட்டை துரை முருகன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, சௌந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘பரதேசி’, ‘தாரை தப்பட்டை’, ‘ஜோக்கர்’,
‘டூ லெட்’ போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து செழியன் ஒளிப்பதிவு செய்ய,

‘சீதா ராமம்’, ‘சித்தா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து விஷால் சந்திரசேகர் இசையமைக்க , கவிப் பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார்.

படத்தின் தொகுப்பாளாராக புவன் சீனிவாசனும், கலை இயக்குநராக மாயப்பாண்டியும், தயாரிப்பு நிர்வாகியாக முத்.அம்.சிவக்குமாரும் பணியாற்றியுள்ளனர்.

மக்கள் தொடர்பு ஆ.ஜான்..

ஒரு கொலை அதன் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என இன்வெஸ்டிகேசன் கிரைம் திரில்லராக மலையாளத் திரைப்பட பாணியில் வளர்ந்துள்ள இத்திரைப்படத்தை இரா.சுப்ரமணியன்
எழுதி இயக்கியிருக்கிறார்.

தென்காசி,குற்றாலம்,
திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம, நகர்ப் புறங்களிலும் உருவாகியிருக்கும் இத் திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது..!

aadham bavaDharma yuththamrk sureshSeeman
Comments (0)
Add Comment