லஞ்சத்தால் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவ மே ” உ யி ர் மூ ச் சு ” திரைப்படம்!

லஞ்சத்தால் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் ஏற்படும் சம்பவ மே

” உ யி ர் மூ ச் சு ”

திரைப்படம்

_________________________

 

ஜோரா சினிமாஸ் நிறுவனம் சார்பில், மெர்சி ரோஸ்லின் ஜோதிமணி தயாரித்துள்ள படம்தான் ” உயிர் மூச்சு” ஜோதிமணி கதை வசனத்தையும், வெங்கடேஷ் ஒளிப்பதிவையும், கமல் நடன பயிற்சியையும், விஷ்ணு மகேஷ் இணை இயக்கத்தையும்

பிராட்வே சுந்தர், ஐ. செல்வகுமார் இருவரும் பாடல்களையும் கவனித்துள்ளனர்.

 

விக்னேஷ்வர் நாயகனாகவும், சஹானா நாயகியாகவும் வலம் வரும் இதில்,

தீபாசங்கர், மீசை ராஜேந்திரன், டெலிபோன் ராஜ், கிங்காங், திருப்பாச்சி பெஞ்சமின் இன்னும் பலர் நடித்துள்ளனர்.

 

இசையமைத்து, எடிட்டிங் செய்து, படத்தையும் இயக்கி உள்ள பிராட்வே சுந்தர் படத்தை பற்றி கூறியதாவது, ” நாட்டில் பட்டப்படிப்பு படித்து பலரும் வேலை தேடி அலையும் இந்த காலத்தில் வேலைக்காகவும், மருத்துவத்திற்காகவும் அவர்கள் ஏங்கி தவிக்கிறார்கள். இதற்காக அவர்கள் செல்லும் இடங்களில் லஞ்சம் என்ற போர்வையில் சில வஞ்சகர்கள் அவர்களை இம்சை படுத்துகிறார்கள். லஞ்சம் கொடுக்க முடியாத நாயகன் வாழ்வில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களை வைத்து விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளேன். இதில் மதுபோதையால் சீரழியும் குடும்பம், மாரடைப்பு ஏற்பட்டால் செய்ய வேண்டிய முதலுதவி என வாழ்வியலுக்கு தேவையான தேவைகளையும் இதில் இணைத்து சமூகத்திற்கு தேவையான விழிப்புணர்வு படமாக இதை இயக்கி உள்ளேன். ” என்று தெரிவிக்கிறார்.

 

சில்வர் ஸ்கிரீன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் “உயிர் மூச்சு” படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வரும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

என். விஜயமுரளி

kollywood newsSahanatamil cinema newstamil film newsUyirmuchu
Comments (0)
Add Comment